வீடியோ
மொழி
எரிவளியை நீர் அழுத்தம் வாயிலாக பிரித்தெடுத்தல் (எவனீவாபி) என்றால் என்ன?
தொசிற்புரட்ச்சி துவங்கிய காலங்களிலிருந்தே, அதற்கான செயலாற்றல் தேவையும் நுகர்வும் இடைவிடாது கூடிக்கொண்டே போகிறது
இச்செயலாற்றல் தேவைகளுக்கு நிலக்கரி அல்லது இயற்கை எரிவளி அகியவற்றைக்கொண்டே நிறைவேற்றப்படுகிறது
அண்மைக்காலங்களில் இந்த இயற்கை எரிவளிகளை பிரித்தெடுப்பது தொடர்பான பல சர்ச்சைகுரிய கருத்தாடல்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது
நீர் அழுத்தம் வாயிலாக எரிவளி பிழிதல்
இது நிலத்தின் ஆழத்தில் இருக்கும் எரிவளிகளை பிரித்தெடுக்கும் முறையே ஆகும்
இந்த முறையில், நீர், மணல், வேதியியல் பொருட்களை அழுத்ததில், நுண் துளைகளை உடைய் பாறைகளினுள் பாய்ச்சி அப்பாறைகளில் முறிவுகளை உருவாக்குவதே முதல் பணி
அப்படி முறிவுகள் ஏற்பட்ட பாறைகளிலிருந்து எரிவளிகளை பிரித்தெடுப்பது இரண்டாம் பணி
1940களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது
என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளில் தான் இந்த முறை அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது
குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டில்.
ஏனென்றால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களிலுள்ள எரிவளிக்கிணறுகள் அனேகமாக வற்றிவிட்டன
அதனால், இயற்கை எரிவளி மற்றும் பிற எரிபொருட்களிம் விலை படிப்படியாக ஏறிக்கொண்டே போகின்றன
எனவே, ஏற்கனவே சொன்னது போன்ற சிக்கலான எரிவளி பிரித்தெடுத்தல் முறைகள், இன்நாட்களில் இலாபகரமாகவும் கவர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது
இந்த முறையை அமெரிக்க ஐக்கிய நாட்டில்மட்டும் இதுவரை பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்தியிருப்பர்.
இன்றளவில் எரி எண்ணை மற்றும் எரிவளிகளில் 60% இம்ம்மூறையிலே பிரித்தெடுக்கப்படுகிறது
இந்த முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் எனப்பார்ப்போம்
முதலில், ஒரு ஊடுகணையை நிலத்தினுள் துளையிட்டு பல நூறு மீட்டர் ஆழத்திற்குள் செங்குத்தாகச் செலுத்தப்படும்
அங்கிருந்து எரிவளி நிறைந்த பாறைகளினுள் கிடைமட்டமாக துளையிடப்படும்
பின்பு, அழுத்தமேற்றிகளை பயன்படுத்தி அப்பாறைகளினுள் நீர்மணல்வேதியியற் கலவையை மிகுந்த அழுத்ததில் செலுத்தப்படும்
சராசரியாக, அந்த கலவையினுள் 80 இலட்சம் லிட்டர் நீர் இருக்கும்.
அது 65000 பேரின் தினசரி தேவைக்கன நீருக்கு சமம்
இதன் கூட, பல்லாயிரம் டன் மணலும் 20 இலட்சம் லிட்டர் வேதியியற் பொருட்கள்..
இந்த கலவையானது பாறை படலத்தின் உள்ளே ஊடுருவி எண்ணற்ற விரிசல்களை அதில் ஏற்படுத்தும்
மணல் துகள்களானது, ஏற்பட்ட விரிசல்கள் அடைந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளும்.
வேதியியற் பொருட்கள் வேறு பல வேலைகளை செய்யும்.
அவை நீரை தக்கவைத்துக்கொள்ளும்
நுண்ணுயிரிகளை கொல்லும்
கனிமங்களை கரைக்கும்
அடுத்தது, உள்ளே செலுத்தப்பட்ட கரைசலில் பெரும்பகுதி உறிஞ்சி எடுக்கப்படும்.
உறிஞ்சி எடுக்கப்பட்ட கரைசலிலிருந்து இயற்கை எரிவளி பிரித்தெடுக்கப்படும்
துளையிட்ட பாறைகளிலிருந்து எரிவளிகள் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டபின், அந்த துளை மூடப்படும்
சட்டப்படி, துளையை மூடுவதற்கு முன்பு, அதில் பயன் படுத்தப்பட்ட நீர்மணல்வேதிமொருள் கரைசற்கழிவை அத்துளையினுள்ளே முழுவதுமாக செலுத்தப்பட்டிருக்கவேண்டும்
இந்த முறை பற்பல இன்னல்களோடே தொடர்புடையது
நிலத்தடி குடிநீர் மாசாவது முதலாவதான இன்னல்
இம்முற மிக அதிக அளவில் ந்ல்ல நீரைப் பயன்படுத்துகிறது
இறுதியில் அன்நீர் மிகவும் மாசுபடுத்தப்பட்டு நச்சுத்தன்மை கொண்டதாகவும் மாற்றப்படுகிறது
நீர் தூய்மைப்படுத்தும் நிலையங்களாலும் கூட அந்த கழிவு நீரை தூய்மையாக்க முடியாத வண்ணம் கெட்டுப்போயிருக்கும்
இந்த கெடுதல்கள் எல்லாம் தெரிந்திருந்தாலும், இதனை கட்டுப்படுத்த முடிந்திருந்தாலும்
கருத்தின்மையால், அமரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நிறைய நீர்வளங்கள் ஏற்கனவே மாசாகிவிட்டன
நிலத்தடியில் அடைக்கப்பட்ட நச்சுநீர் இனிவருங்காலங்களில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என் யாருக்கும் தெரியாது
இவை என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும் என எவ்வகையான நீண்டலாக ஆய்வுகளும் நடத்த்தப்படவில்லை
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிப்பொருட்கள்
பென்சால், ஃபார்மிக் அமிலம் போன்றவை புற்றுநோய் போன்ற இடர் விளைவிக்கக்குடிய நச்சுப்பொருட்களாகும்
இந்த எரிவளி உறிஞ்சும் முறையை கையாளும் நிறுவனங்கள், என்னென்ன வேதியியற் பொருட்கள் என்னென்ன அளவில் பயன்படுத்தப்படுகின்றன என வெளியில் சொல்வதில்லை
கிட்டத்தட்ட 700 வகையான வேதிப்பொருட்கள் வரை பயன்படுத்தப்படலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே
பசுமைக்குடில் வளிகளின் வேளியீடு என்பது இதிலிருக்கும் இன்னொடு இன்னல்
பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை எரிவளியில் பெரும்பான்மையாக இருப்பது மீதேன்
மீதேன் எனும் பசுமைக்குடில் வளி கரியமிலவளியை விட 25 மடங்கு அழியாற்றல் கொண்டது
நிலக்கரியைவிட இயற்கை எரிவளி குறைந்த பாதிப்புகளையே ஏற்படுத்தும்
என்றாலும், இப்பிரித்தெடுத்தல் முறையிலுள்ள தீங்குகளைப் பார்க்கையில்
இதனால் தட்பவெப்ப சமனிலைக்கு பாதிப்பு மிகுதியெ
முதலாவதாக, இந்த பிரிதெடுத்தல் முறைக்கு மிகுதியான ஆற்றல் தெவைப்படுகிறது
இரண்டாவதாக, இம்முறைக்காக் ஏற்படுத்தப்பட்ட துளைகளில் வளி வேகமாக வற்றிப்போகையில்
அடுத்தடுத்து அடிக்கடி போடப்படும் துளைகளின் எண்ணிக்கை, முந்தைய வளி உறிஞ்சுதல் முறைகளில் தோண்டப்படும் கிணடுகளைவிட அதிகமானதாக இருக்கிறது
இதுபோக, பிரித்தெடுத்தலின்போது 3% எரிவளிகள் காற்றுமண்டலத்துள் கலக்கிறது
அப்பொழுது, இம்முறையால் கிடைக்கும் பயன்களை
அதன் நன்மை தீமைகளை கணாக்கிட்டு எவ்வாறு முடிவுக்கு வருகிறார்கள்?
மிகச்சரியான பணியமர்த்தல்களின் வாயிலாக, இந்த முறையால்
சில குறுகிய கால எரிவளி ஆற்றல் தேவைகளை குறைந்த செலவில் நிறைவுசெய்ய முடிகிறது.
ஆனால், நீண்டகால பின்விளைவுகளை எதிர்பார்த்துக் கணிக்கமுடியாது
இம்முறையால் நிலத்தடி குடிநீர் தேக்கங்களுக்கு ஏற்படப்போகும் இடர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது
துணை உரை: இரா.பத்மகுமார்.