நான் கொஞ்சம் அதிகமாக ஈடுபட்டால் பிறருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன்.
அது தொழிலுக்கு எதிரானது.
உங்கள் கணவன் உணர்வுரீதியாக அச்சுறுத்துகிறான். அவனை விடுங்கள்.
சரி.
ஸ்க்ரப்ஸ் மற்றும் டெட் லாஸ்ஸோவின் தயாரிப்பு நிர்வாகியான பில் லாரன்ஸ் வழங்கும்
-தம்பி, உனக்காகக் கவலைப்படுகிறேன். -[ஜிம்மி] அவளுக்காக வேதனைப்படுகிறேன்.
[அழுகிறார்]
நீ உணர்வின்றி இருக்கிறாய்.
ஜேசன் சீகல்
[பால்] நீ வேதனையில் மூழ்கப் போகிறாயா
அல்லது அதை எதிர்கொண்டு…
ஹேரிஸன் ஃபோர்ட்
-…அதிலிருந்து சரியாகப் போகிறாயா? -இரண்டிற்கும் வாய்ப்புள்ளது.
இங்கிருந்து வெளியே போ.
2019 பாரிஸ்
[கோமெஸ் முனகுகிறார், மூச்சிழுக்கிறார்]
[தோழி] எப்படி உணர்கிறாய்?
[கோமெஸ்] மிகவும் களைப்பாக இருக்கிறேன்.
[தோழி] உனது காலை மருந்துகளை எடுத்துக்கொள்கிறாயா?
[கோமெஸ்] ம்ம்.
[தோழி] எனக்கு பதில் தெரியும், ஆனால்… நீ எடுத்துக்கொள்ள வேண்டும்.
-[கேமரா ஷட்டர்களின் சத்தம்] -[பாப்பராஸி பேசுகிறார்] மார்னிங், செலீனா.
[கோமெஸ்] நான் ஒரு சத்தியம் செய்கிறேன்.
எனது மோசமான ரகசியங்களை மட்டுமே உன்னிடம் சொல்வேன்.
டிசம்பர் 19.
நான் இதுபோல வாழ்வதை நிறுத்த வேண்டும்.
நான் ஏன் நம்பிக்கையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறேன்?
நான் விரும்பிய அனைத்தையும், நான் செய்துவிட்டேன்…
ஆனால் அது என்னைக் காயப்படுத்தியுள்ளது.
ஏனெனில் எப்போதும் செலீனா பற்றியதுதான்.
-[செய்தியாளர்கள் கத்துகின்றனர்] செலீனா! -[ரசிகர்கள் ஆரவாரம்]
[கூட்டத்தினர் அலறுகின்றனர்]
ஸ்போர்ட்ஸ் அரேனா தெற்கு
[டிவி செய்தியாளர் 1] செலீனா கோமெஸ், உங்களது, “குட் ஃபார் யூ”
விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் வெற்றியடைந்தது.
[டிவி செய்தியாளர் 2] …சமீபத்தில் சமூக ஊடகங்களின் ராணி என அழைக்கப்படுகிறார்.
ஹலோ, ஹாவர்ட்.
[டிவி செய்தியாளர் 3] செலீனா கோமெஸும் ஜஸ்டின் பீபரும்
-தங்கள் உறவை முறித்துக்கொண்டனர். -[டிவி செய்தியாளர் 4] மீண்டுமா?
உண்மையாகவா? நான் ஒரு ராக் ஸ்டார் போல உணரவில்லை.
-[ஜிம்மி ஃபாலன்] இந்த ஆல்பம், ரிவைவல்… -[பார்வையாளர்கள் ஆரவாரம்]
…மக்கள் அதை… அது முதல் இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர்,
அந்த டூர் விரைவில் தொடங்கப் போகிறது, இல்லையா? மே மாதத்திலா?
[கோமெஸ்] நான் மே மாதத்தில் டூர் செல்கிறேன்.
ஓ, நான் இப்போது எல்ஏ ஸ்போர்ட்ஸ் அரேனாவில் இருக்கிறேன்.
ம், நான் டூருக்குப் புறப்பட இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.
என்னுடன் எனது சிகை மற்றும் ஒப்பனைக் குழுவினர் உள்ளனர், தினமும் புதியதை முயன்று பார்க்கிறோம்.
நாங்கள் நிகழ்ச்சியில் என்ன அணியப் போகிறோம்
என்று சோதித்துப் பார்க்கிறோம். நிகழ்ச்சியின் அடையாளம்.
-[கோமெஸ்] இது பிடித்துள்ளதா? -[பேசுகின்றனர்]
ஏனெனில் அந்த வெள்ளை வழியாக கண்ணாடியில் பார்ப்பதாலா?
அது அந்த சீக்குயின்கள் என நினைக்கிறேன். [சிரிக்கிறார்]
நான்… மையத்திலிருந்து கொஞ்சம் மாற்றுகிறேன். சரி.
அவற்றில் அந்த சிறிய பெண்ணுறுப்பு விஷயங்களும் உள்ளனவா?
-[ஸ்டைலிஸ்ட் 1] சரி. ஆம். -அந்த பட்டையாக இருப்பவை.
-எனக்குத் தெரியவில்லை. விசித்திரமாக உள்ளது. -[ஸ்டைலிஸ்ட் சிரிக்கிறார்]
நான் ஒரு ஆணாக இருந்தால், ஜீன்ஸ் அணிந்துகொண்டு என் டீ-ஷர்ட்டை மட்டும் மாற்றிக்கொண்டு
-தொப்பி அணிந்திருப்பேன்… -[சிரிக்கின்றனர்]
-…யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். -[உடையில் ஜிப் போடுகிறார்]
மார்பகப் பகுதி அழகாக உள்ளது.
-எனக்குத் தெரியவில்லை. -[டிசைனர்] பிடித்துள்ளதா?
-எனக்கு மார்பகம் கொஞ்சம் பெரிதாக வேண்டும். -வழக்கமான “மார்பகங்கள்.”
[கோமெஸ்] எனது பெண்ணுறுப்பு…
-[ஸ்டைலிஸ்ட் 1] இல்லை. அது… -…எல்லா உடையிலும் இப்படித்தான்.
-அது நீங்கள் இல்லை… -அது…
-…என்னை நானே கேலி செய்கிறேன். -[ஸ்டைலிஸ்ட் 2] இருங்கள். இதைப் பாருங்கள்.
-[ஸ்டைலிஸ்ட் 3] நீங்கள் இல்லை, எனது பெண்ணுறுப்பு. -உண்மையாக எனது பெண்ணுறுப்புதான்.
இதைப் பெருமையாக அணிந்துகொள்வதற்கான உடலும், என்னிடம் இல்லாத பின்பகுதியும் வேண்டும்.
-என் உடல் இளம் பெண் போல உள்ளது. -[ஃபேஷன் குழு உறுப்பினர்] ஆம்.
-”ஓ, இருங்கள்” என்று இருக்க விரும்பவில்லை. -[குழுவினர் பேசுகின்றனர்]
நான் ஒரு பெண் போல தோன்ற வேண்டும், 12 வயது சிறுவன் போல இல்லை.
[பியானோவில் ”ஹூ சேஸ்” இசைக்கிறது]
♪ நான் வேறு யாராகவும் இருக்க விரும்பவில்லை ♪
♪ யா ♪
♪ நீ என்னை பாதுகாப்பற்றவளாக மாற்றுகிறாய் ♪
டூரின் இறுதி ரிஹர்சல்
♪ நான் சிறப்பானவள் இல்லை என்றாய் ♪
♪ ஆனால் நீயே குறையுள்ளவனாக இருக்கும்போது என்னைச் சொல்ல நீ யார்? ♪
♪ உன்னிடம் மாற்றிக்கொள்ள சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் ♪
♪ ஆனால் என் விஷயத்தில் நான் வேறு யாராகவும் இருக்க விரும்பவில்லை ♪
♪ நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா ♪
♪ நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா ♪
♪ நான் அழகான மகாராணி இல்லை நான் அழகான நான் தான் ♪
♪ நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா ♪
♪ நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா நா-நா ♪
♪ அழகான வாழ்க்கையைப் பெற உனக்கு எல்லா உரிமையும் உள்ளது ♪
♪ யார் சொல்வது? ♪
♪ உங்களிடம் குறை உள்ளது என்று யார் சொல்வது? உங்களுக்கு மதிப்பில்லை என்று யார் சொல்வது? ♪
♪ நீங்கள் மட்டும்தான் கஷ்டப்படுகிறீர்கள் என யார் சொல்வது? ♪
♪ என்னை நம்புங்கள் அதுதான் அழகுக்குக் கொடுக்கும் விலை ♪
♪ நீங்கள் அழகில்லை என்று யார் சொல்வது? ♪
♪ நீங்கள் அழகாக இல்லை என்று யார் சொல்வது? ♪
♪ யார் சொல்வது? ♪
[பாடுகிறார்]
♪ ஆடை நீளமாக உள்ளது ♪
♪ இது திறக்கும் விதத்தை நான் வெறுக்கிறேன் ♪
இது சரியாக இல்லை.
-[தோழி 1] என்ன பிரச்சினை? -எல்லாமேதான். இது மோசமாக உள்ளது.
[கோமெஸ் தேம்புகிறார்] எனக்கு…
நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியவில்லை. [விசும்புகிறார்]
-[தோழி 2] எந்தப் பகுதியில் அப்படி உணர்ந்தாய்? -ம், தொடக்கத்தில் இருந்தே. [விசும்புகிறார்]
நீ இதை மிஸ் செய்துவிட்டாய் என என் தலைக்குள் ஒரு குரல் கூறுகிறது.
அது மோசமாக இருந்தது.
ஓ, திரையில் நான் என்னைப் பார்த்தேன்.
அடடா, அது மிகவும் கேவலமாக உள்ளது.
பிறகு நான் அங்கே உட்கார்ந்திருந்தேன், உடைகளில் தடுக்கி விழுந்தேன்,
இது ஒரு…
-இது என் தீர்மானத்தைக் குறைத்து… -[தோழி 2] ஆம்.
…என்னைப் பாடவிடாமல் செய்கிறது. [விசும்புகிறார்]
இந்த அழுத்தம் என்னை மூழ்கடிக்கிறது, ஏனெனில் என்னால் முடிந்ததை நான் செய்ய விரும்புகிறேன்,
மேலும்… என்னால்… எனக்கு… [விசும்புகிறார்]
ஜான் என்ன நினைப்பார் எனத் தெரியவில்லை.
நான் ஜானிடம் பேச விரும்புகிறேன், ஏனெனில்… நான் அவர் ஏமாற்றமடைய விரும்பவில்லை.
அவர் ஒரு குழந்தையுடன் ஒப்பந்தம் போட்டதாக நினைக்க விரும்பவில்லை, அதாவது…
ஜான் அங்குதான் நின்றுகொண்டிருந்தார்,
-நன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தார். -ஜான் உற்சாகமாக இருந்தார்.
[தோழி 1] இது உனது கற்பனை.
அந்தப் பாடல் விஷயமே மோசமாக இருந்தது.
அவர் ஜஸ்டின் உடனான பாடல் பற்றிப் பேச காலையில் கால் செய்தார்,
-நான்… -[தோழி 1] டீஜே விஷயமா?
”நான் மட்டுமே தனியாக எப்போது சிறப்பாக இருக்கப் போகிறேன்?” என்றேன்.
-[மேனேஜர்] அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். -நான் எப்போது…
நான் மட்டுமே தனியாக எப்போது சிறப்பாக இருக்கப் போகிறேன்?
என்னுடன் யாரும் இருப்பதற்கு அவசியமில்லாமல் இருக்க.
-அது மிகவும்… -[மேனேஜர்] நீங்கள் அப்படித்தான் உள்ளீர்கள்.
[தோழி 1] ஹாய், ஜான்.
-என்னை மன்னித்துவிடுங்கள். -[ஜேனிக்] எதற்காக மன்னிப்பு கேட்கிறாய்?
என்னுடன் ஒப்பந்தம் போட்டதற்காக நீங்கள் வருத்தப்படவோ உங்களுக்கு…
-என்ன? -…எதுவும் தேவை என உணரவோ விரும்பவில்லை…
ஜான் - இன்டர்ஸ்கோப் கெஃபென் ஏ&எம் ரெக்கார்ட்ஸின் தலைவர்
-நீ அற்புதமாகப் பாடினாய். -நாங்கள் இருவரும் உன்னருகில்தான் இருந்தோம்.
உடை மோசமாக இருந்தது. எல்லாமே மோசமாகத்தான் இருந்தது.
நீ அற்புதமாக இருந்தாய். அது எனக்கு அற்புதமாகத்தான் இருந்தது.
நான் உன்னைக் கட்டிப்பிடிக்கவா? உன்னைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறேன். [சிரிக்கிறார்]
நீ அற்புதமாகப் பாடினாய். அது மிகவும் நன்றாக இருந்தது.
-[தோழி 2] உண்மையாகத்தான். -”மீ அண்ட் மை கேர்ள்ஸ்” அற்புதமாக இருந்தது. அது…
[தோழி 1] ஆம். ஜான் அங்கே இப்படித்தான் நின்றுகொண்டிருந்தார். ஜான்…
நான் அதை ரசித்துக்கொண்டிருந்தேன். அது அற்புதமாக இருந்தது.
[கோமெஸ்] அது சிறுபிள்ளைத்தனமாக இருந்ததா?
-அது அப்படி இல்லை. -[தோழி 2] இல்லை.
கடந்தகால என்னைப் போல நான் இருக்க விரும்பவில்லை.
அது மீண்டும் வருகிறது.
இப்போதைக்கு நீதான் உனது மோசமான எதிரி.
உன் மனதுக்குள் எதிர்மறையான எண்ணங்கள் வரும்போது, அது உன்னை ஆக்கிரமிக்க விடக்கூடாது.
-உடைகளை மாற்றலாம். -[தோழி 1] ஆம்.
லைட்களை மாற்றலாம். செட்டை மாற்றலாம்.
மேடை வேண்டாம் என்றால், நீ கீழே இறங்கிப் பாடலாம்.
பிறருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது முக்கியமில்லை. உனக்குப் பிடிக்க வேண்டும்.
நீ அதை விரும்ப வேண்டும். அது உனது நிகழ்ச்சி.
உன்னையே மோசமாக நினைத்துக்கொள்ளாதே. அது சிறப்பாக இருக்கும்.
-ஜான், நன்றி. -உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
-மன்னிக்கவும். நன்றி. -சீக்கிரம் உன்னைச் சந்திக்கிறேன்.
நன்றி. இல்லை. இது உண்மையில் சிறப்பாக உள்ளது.
நன்றி.
-[விசும்புகிறார்] -[தோழி 1] ஆ.
என்னை மன்னித்துவிடுங்கள். [தேம்புகிறார்]
இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[குழு உறுப்பினர்] அவர்கள் வருகின்றனர்.
மாண்டலே பே லைட் நைட்கிளப் - வெள்ளி மே 06
நிகழ்ச்சிக்குப் பிறகு நடக்கும் பார்ட்டியை செலீனா கோமெஸ் நடத்துகிறார்
[கூட்டத்தினர் பேசுகின்றனர்]
ஓப்பனிங் நைட்
எனது ரிவைவல் செலீனா கோமெஸ் ரிவைவல் டூர் 2016
-[கோமெஸ்] தெரஸா? -[உதவியாளர்] ஹேய், பெண்ணே.
-எனது ரத்த அழுத்த மிஷினை எடுத்து வந்தாயா? -ஆம். இங்குதான் உள்ளது.
[உதவியாளர்] இது உங்கள் லூப்பஸுக்காகத்தானே?
ஆம்.
-இப்போது அழுத்தவா? தொடங்கவா? -ம்ம் ஹ்ம்ம்.
-நன்றாக உள்ளதா? -அருமை.
[உதவியாளர்] உங்களுக்கு எப்படித் தெரியும்?
78 இன் மேல் 109 என்பது நல்லது.
நமக்கு இருக்கும் சராசரி அளவு 78 இன் மேல் 120.
ஆனால் எனது ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்,
அது வழக்கமாக 150, 145 இருக்கும், கீழே இருப்பது 100 இருக்கும்,
-அதாவது எனக்கு வாதம் வரலாம். -ஓ.
[உதவியாளர்] புரிந்தது.
-அது 120க்குக் கீழ் இருக்கும் வரை… -இதை டூருக்காக இங்கேயே வைத்திருக்கலாமா?
உங்களது சிறிய…
-அதாவது, பஸ்ஸில் இருக்கலாம். -சரி.
அது எதற்கும் நாம் இருக்கும் இடத்திலேயே இருக்கட்டும்.
[மேனேஜர்] உங்களுக்கு ஒரு பரிசு வைத்துள்ளோம், பிறகு உங்களைத் தனியாக விடுகிறோம்.
-[சிரிக்கிறார்] -இதிலிருந்து தொடங்குகிறீர்களா?
இது நானும் ஸாக்கும் கொடுப்பது.
அலீன் & ஸாக் செலீனாவின் மேனேஜர்கள்
இது உங்கள் டூருக்காக நாங்கள் சேகரித்தது.
[கோமெஸ்] இது என்ன?
தினமும், அன்றைய இரவுக்கான அதிர்ஷ்ட வார்த்தை,
நீங்கள் இதை நினைக்கப் போகிறீர்கள்…
[மார்கென்ராத்] இதை உங்கள் மேக்கப் மேசையில் வைத்துக்கொள்ளுங்கள்.
…உங்களுக்காக. ஒவ்வொரு நிகழ்ச்சியும் வித்தியாசமானது.
-இது கனிவான விஷயம். -[கோமெஸ்] அடக் கடவுளே.
-இவற்றைப் பாருங்கள். -[குழு உறுப்பினர்] இனிமையாக உள்ளது.
இது எங்களை அழவைக்கிறது.
தினமும் நீங்கள் ஒன்றைத் தேர்வுசெய்வீர்கள்.
-அது மிகவும் அழகாக உள்ளது. -இது நன்றாக உள்ளதல்லவா?
-மிக்க நன்றி. -உங்களை மிகவும் நேசிக்கிறோம்.
[கெஷிஷியான்] உங்களுக்கான என் கேள்வி,
நீங்கள் ரசிகர்களை அதிகமாகச் சந்திப்பதாகத் தோன்றுகிறதா?
அவர்கள் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்குத் திட்டமிட்டிருந்தனர்.
அதற்கு நீண்ட நேரம் எடுக்காது என நினைக்கிறேன்.
-என்ன நினைக்கிறீர்கள்? -சில நேரம் அவர்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள்.
-இன்று என் பிறந்த நாள். -அப்படியா? பிறந்த நாள் வாழ்த்துகள்.
-நன்றி. -உனக்கு என்ன வயது?
-13 வயது. -அடக் கடவுளே.
என் மூன்று வயதிலிருந்து உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறேன்.
-என் பிறந்த நாளையா? -நான் பிறந்த…
பிறந்த நாள் பார்ட்டிகள், கேக்குகள், பிளேலிஸ்ட்டுகள் அனைத்தும் செய்வேன்.
-நீ மிகவும் இனிமையானவள். நன்றி. -[ஃபோட்டோகிராஃபர்] ஒரு படம் எடுக்கலாமா?
-அப்படித்தான். -மிகவும்…
-[ஃபோட்டோகிராஃபர்] மூன்று, இரண்டு. -ஆம், எடுப்போம்.
-அழகாக உள்ளது. -[பெற்றோர்] ஹேய், அழாதே.
[ஃபோட்டோகிராஃபர்] ஆ. எடுத்துவிட்டேன்.
அதில் “முதல் காதலி” என்று எழுத முடியுமா?
-சரி. -[சிரிக்கின்றனர்]
[கோமெஸ் சிரிக்கிறார்]
ஆம். எனக்கு நிறைய காதலிகள் உள்ளனர்.
-[சிரிக்கிறார்] -நான்…
நான் முதல் காதலியாக இருக்க முடியுமா?
-ஆம். -சரி.
-[பேசுகின்றனர்] -[பியானோ இசைக்கிறது]
[குழு உறுப்பினர்] இவர்கள் சில மிகவும் முறையற்ற விஷயங்களைக் கேட்டுள்ளனர்.
♪ …ஹல்லேலூயா ஹல்லேலூ… ♪
நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்ததற்கு நன்றி நண்பர்களே.
இது எனக்கு மிக மிக முக்கியமானது.
இது நான் செய்த டூர்களிலேயே மிகவும் முக்கியமானது,
அதனால்தான் நான் தினமும் மிகவும் மோசமான மனநிலையில் உள்ளேன்.
நாம் அங்கே சென்று மக்களுக்கு உத்வேகம் அளித்து, மகிழ்ச்சியாக இருப்போம் என நம்புகிறேன்.
நமது கால்களையும், கைகளையும், இசைக்கருவிகளையும், அனைத்தையும் ஆசீர்வதிக்கட்டும்.
நமது லைட்கள், பாஸ், மெலிஸ்ஸா அனைவரையும்.
-உங்களை நேசிக்கிறேன். இயேசுவின் பெயரில். ஆமென். -[டூர் குழு] ஆமென்!
[கூட்டத்தினர் ஆரவாரம்]
[”மீ அண்ட் தி ரிதம்” இசைக்கிறது]
♪ இந்த வெப்பம்தான் பொதுவானது ♪
♪ உங்கள் வரலாறு எதுவாக இருந்தாலும் ♪
♪ என்னுடன் வெளிப்படையாக இருங்கள், ஓ ♪
♪ அனைவரும் தொடப்பட விரும்புகிறார்கள் அனைவரும் செக்ஸை விரும்புகிறார்கள் ♪
♪ ஆனால் நான் ஆடும்போது ♪
♪ காதல் பற்றி பாடல் பாடாதே ♪
♪ நான் எதையும் பற்றிப் பேச வேண்டியதில்லை ♪
♪ வேதிப் பொருட்கள் அவற்றின் வேலையைச் செய்யட்டும் ♪
♪ ஆற்றல் மிக அதிகமாகும் வரை ♪
♪ ஓ ♪
♪ யா, எனக்குத் தேவையெல்லாம் ♪
♪ ரிதம்தான், ஓ ஓ ♪
♪ நானும் ரிதமும் ♪
♪ ஓ, ஓ இடையில் எதுவுமில்லை ♪
♪ யா, ரிதம், ஓ ஓ ♪
♪ நானும் ரிதமும், ஓ ஓ ♪
[கூட்டத்தினர்] ♪ யார் கூறியது? ♪
♪ அதை யார் கூறியது எனக் கூறுகிறீர்களா? ♪
♪ யா, யார் கூறியது? ♪
♪ யார் கூறுவது? உன்னிடம் குறையுள்ளது என யார் கூறுவது? ♪
♪ உனக்கு மதிப்பில்லை என யார் கூறுவது? ♪
♪ நீ மட்டும்தான் காயப்படுகிறாய் என யார் கூறுவார்கள்? ♪
♪ என்னை நம்புங்கள், அதுதான் அழகாக இருப்பதன் விலை ♪
♪ நீ அழகில்லை என்று யார் கூறுவது? ♪
♪ நீ அழகாக இல்லை என யார் கூறுவது? ♪
[கூட்டத்தினர், கோமெஸ்] ♪ யார் கூறுவது? ♪
-[கூட்டத்தினர் ஆரவாரம்] -அடச்சை.
-[கேமரா ஷட்டர் சத்தம்] -[ரசிகர்] ஹேய், செலீனா!
-நாங்கள் பிக் பென் அருகில் இருக்கிறோம். ஊ! -[சிரிக்கின்றனர்]
[”மீ அண்ட் மை கேர்ள்ஸ்” இசைக்கிறது]
♪ நானும் என் தோழிகளும், நானும் என் தோழிகளும் ♪
♪ நானும் என் தோழிகளும் ♪
[மரியாச்சி இசை இசைக்கிறது]
-[”மீ அண்ட் மை கேர்ள்ஸ்” தொடர்கிறது] -[பேசுகின்றனர்]
[டிவி செய்தியாளர் 1] அவருக்கு போதை மருந்து பிரச்சினை உள்ளது என வதந்திகள்…
[டிவி செய்தியாளர் 2] செலீனா அதிகமாக பார்ட்டி செய்கிறார். அவர் கட்டுப்பாடின்றி இருக்கிறார்.
[கூட்டத்தினர் ஆரவாரம்]
தொடங்கலாம்!
-[கூட்டத்தினர் கூச்சலிடுகின்றனர்] -[இன்ஜின் உறுமுகிறது]
நான் மேடையில் ஏறப் போகிறேன்.
-என்னை வாழ்த்துங்கள். -[ஆரவாரம்]
[”சோபர்” இசைக்கிறது]
♪ நீ நிதானத்தில் இருக்கும்போது எப்படி என்னைக் காதலிப்பது என உனக்குத் தெரியாது ♪
♪ பாட்டில் காலியானதும் நீ என்னை இழுத்து… ♪
[ரசிகர்] செலீனா, நான் உங்களை நேசிக்கிறேன்.
[பாப்பராஸோ] ஜஸ்டின் பீபரால் நீங்கள் மறுவாழ்வு மையத்திற்குப் போனீர்களா?
[செய்தியாளர்] ஜஸ்டினுடன் புதிய காதலி இருக்கிறார்.
[பாப்பராஸோ 2] நீங்கள் பொறாமைப்படுகிறீர்களா, செலீனா?
♪ எனக்கு அந்தப் பழைய காதல் சலித்துவிட்டது ♪
செலீனா. நீங்கள் மீண்டும் குடிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
-செலீனா. ஆல்கஹால் எங்கே? -மீண்டும் குடிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
-[கோமெஸ்] பாடுங்கள். -[கூச்சலிடுகின்றனர்]
[கூட்டத்தினர்] ♪ எனக்கு அந்தப் பழைய காதல் சலித்துவிட்டது ♪
♪ அது என்னை வருத்தமடையச் செய்கிறது ♪
-நான் மிகவும் கஷ்டப்பட்டேன். -[குழு உறுப்பினர்] ஆம்.
[கோமெஸ்] நான் என்ன தவறவிடுகிறேன்? எனக்கு என்ன தேவை?
[தோழி] அனைவரும் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கின்றனர்…
நண்பர்களே, இங்கே நிறைய பேர் உள்ளனர். மன்னிக்கவும். நிறைய பேர் உள்ளனர்.
-[தோழி] ஆராய்வதை நிறுத்து. -[கோமெஸ்] இல்லை.
-[தோழி] மகிழ்ச்சியாக இரு. -நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.
அதை வெறுக்கிறேன். [முனகுகிறார்]
[பலமாக மூச்சுவிடுகிறார்]
ஒரு பெண்ணாக இருப்பதும்
பைத்தியக்காரத்தனமாக இருப்பதும் கடினமானது.
அது என்னைக் கோபப்படுத்தும் இன்னொரு விஷயம்.
நான் விரைவாக உடை மாற்றுகிறேன்,
ஒரு கையைக் கிழிக்கிறேன், பிறகு மற்றொரு கையைக் கிழிக்கிறேன்,
பிறகு கீழே இருக்கும் பாதி முழுவதையும் கிழிக்கிறேன்.
♪ ஓ, அது… ♪
[செய்தியாளர்] ஜஸ்டினைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
[செய்தியாளர் 2] நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா?
-[செய்தியாளர் 3] களைப்பாக உள்ளதா? -[செய்தியாளர் 4] அவருக்கு எப்போதும் களைப்புதான்.
[பாப்பராஸி கூச்சலிடுகின்றனர்]
சில நேரம்… நான் எழும்போது, எனக்கு உத்வேகம் இருப்பதாகத் தோன்றாது.
55 நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ரிவைவல் டூர் ரத்துசெய்யப்பட்டது
[செய்தியாளர்] செலீனா இப்போது ஓய்வில் இருக்கிறார்,
கவலை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைச் சமாளிக்கிறார்.
[செய்தியாளர் 2] அவருக்கு போதை மருந்து பிரச்சினைகள் இருந்ததாக வதந்திகள் இருந்தன.
[செய்தியாளர் 3] பிரபலமாக இருப்பதின் ஆடம்பர வாழ்க்கையும் பார்ட்டியும்
அவரையும் அவரது வாழ்க்கையையும் கெடுக்க விட்டுள்ளார்.
[உதவியாளர்] ஒரு கட்டத்தில், “நான் இப்போது உயிருடன் இருக்க விரும்பவில்லை.
நான் வாழ விரும்பவில்லை” என்றார்.
தெரஸா முன்னாள் உதவியாளர்
நான், “இருங்கள். என்ன?” என்றேன்.
அது அவரது கண்களைப் பார்க்கும்போது
அதில் எதுவும் இல்லாமல் இருக்கும் தருணங்களில் ஒன்று.
அதில் எதுவுமே இல்லாமல், பயமுறுத்தும்படி இருந்தது.
”சரி, இது கிடக்கிறது.
இது முடிய வேண்டும், நாம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” எனத் தோன்றியது.
நாம் அவளுடன் தீவிரமாகப் பேச வேண்டும்…
ரகெல் செலீனாவின் தோழி
…“என்ன நடக்கிறது?” என்று.
அவள் “தெரியவில்லை. என்னால் விளக்க முடியவில்லை.
நான் உணரும் எண்ணங்களை உன்னால் உணர முடிந்தால் புரியும்” என்றாள்.
அது மிகவும் குழப்பமாக இருந்ததும், அவள் மனதில் குரல்கள் கேட்டதும் எனக்கு நினைவுள்ளது.
அவை போகப் போக சத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தன.
அது உளவியல் ரீதியில் ஒருவித எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது.
செலீனா கோமெஸ், ம், கடந்த சில வாரங்களாக கடினமான சூழலில் இருக்கிறார்.
போன ஆண்டு, அவர் லூப்பஸுடன் போராடினார், சிறுநீரக மாற்றம் அவரது உயிரைக் காப்பாற்றியது.
அதன் விளைவாக,
செப்டம்பரின் கடைசி வாரத்தில் அவரது வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்தன.
முழுவதும் மருத்தவ நிலையான அது, உளவியல் பிரச்சினையாக மாறியது.
[செய்தியாளர் 2] அவர் தனது ஐவிக்களை எடுக்க முயன்றார்.
அது மோசமாக இருந்தது, அதனால் அவரை மனநல மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.
அவரது மோசமான உளவியல் நிலை பற்றி டிஎம்ஸி மூலமாகத் தெரிந்தது.
அவர்கள் எனக்கு கால் செய்து…
மேண்டி செலீனாவின் தாயார்
…என் மகள் மிகவும் மன அழுத்தத்துடன் மருத்துவமனையில் என்ன செய்கிறாள் எனக் கேட்டனர்.
அவள் என்னுடன் எதிலும் சம்மந்தப்பட விரும்பவில்லை,
அவள் இறந்துவிடுவாளோ என நான் பயந்தேன்.
[ஸ்டீவன்ஸ்] நான் பார்த்தவற்றையும் அந்த
மனநல மருத்துவமனையில் அவள் இருந்த நிலையையும் யாராவது பார்த்தால்,
அவர்களுக்கு அவளை அடையாளமே தெரிந்திருக்காது.
நான் விரக்தியடைந்தேன்
ஏனெனில் மனநோய் என்பது பல நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் வரை,
வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.
அவர்களது சிகிச்சையில் உதவ, நாம் முடிந்தவரை பொறுத்துக்கொள்ள வேண்டும்,
அதுதான் கடினமான விஷயம்,
பிறகு இரவு தூங்கச் சென்று அடுத்த நாள் அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என நம்ப வேண்டும்.
[கோமெஸ்] என் எண்ணங்கள் என் மூளையைக் கட்டுப்படுத்துகின்றன.
என் கடந்த காலத்தை நினைக்கும்போது எனக்கு வலிக்கிறது.
நான் மீண்டும் சுவாசிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
நான் என்னையே நேசிக்கிறேனா?
என் சுவாசத்தை மீண்டும் சுவாசிக்க எப்படிக் கற்றுக்கொள்வது?
[ஆழமாக மூச்சுவிடுகிறார்]
[டீஃபி] அவள் மீண்டு வந்தது அதிசயம்தான்…
[குரல் தழுதழுக்கிறது] …ஆனால் அது மீண்டும் நடந்து, மீண்டும் அதிக வலியை ஏற்படுத்தும்
என்ற பயம் எப்போதும் இருக்கும்.
வீட்டிற்கும் உன் மெத்தைக்கும் வரவேற்கிறோம் அன்புடன் + கிரேஸி
[கோமெஸ்] எனக்கு பைபோலார் டிஸார்டர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
நான் உண்மையைச் சொல்கிறேன்,
நான் மனநல மருத்தவமனைக்குச் செல்ல விரும்பவேயில்லை.
நான் விரும்பவில்லை,
ஆனால் இனியும் என் மனதிற்குள் மாட்டிக்கிடக்க விரும்பவில்லை.
என் வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்தேன். “இப்படித்தான் இனி இருக்க போகிறேன்” என நினைத்தேன்.
அதனால்தான் பிறரிடம் எனக்கு மிகச் சிறந்த நண்பர்களும் குடும்பத்தினரும் உள்ளனர் என்பேன்,
குறிப்பாக என் அம்மா, என் வளர்ப்புச் சகோதரன், பிரையன்.
ஏனெனில் நான் அவர்களிடம் பேசியபடி பேசியிருக்கக்கூடாது,
சில நேரம் அவர்களை நடத்தியபடி நடத்தியிருக்கக்கூடாது. [விசும்புகிறார்]
பிறகு அது நான் இல்லை என அவர்களுக்குத் தெரிந்தது,
அதனால் அடுத்த நாள் நான் விழிக்கும்போது…
[திக்குகிறார்] என்ன நடந்தது என அவர்கள் கூறுவார்கள், ஆனால்… அவர்கள் என்னிடம்…
அவர்கள், “பேசுவது நீ இல்லை என எங்களுக்குத் தெரியும்,
நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்… உன்னை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.
நேற்றிரவிலிருந்து இப்போது வரை எங்களுக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை” என்றனர்.
ஆனால் அதைப் பற்றி அவர்களிடம் பேசினால்,
அதை மீண்டும் மீண்டும் சொல்வேன், புரிகிறதா?
நான், “என்னை மன்னித்துவிடுங்கள்” என்பேன்.
ஏனெனில் நான் செய்த சில விஷயங்களும் நான் மிகவும் மோசமாக நடந்துகொண்டேன்
என்பதும் எனக்கு நினைவிருக்கும்.
மேலும்… இப்போது வரையிலும், நான் செய்யும் அனைத்திற்கும் “நன்றி” மற்றும்
”மன்னிக்கவும்” கூறி வருகிறேன்…
அவர்கள் எப்போதும், “அனைத்தும் எங்களுக்குத் தெரிந்தவுடன், அது
எங்களுக்குப் புரிந்தது, செலீனா.
நீ இதுவரை இருந்ததிலேயே மிகவும் சிறந்த மனநிலையில் இருக்கிறாய்,
அதைப் பார்க்க எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, எப்போதும் உன்னைக் கைவிட மாட்டோம்” என்றனர்.
பல முறை அவர்கள் கைவிட்டிருக்க வேண்டியபோதும் அப்படிச் செய்யவில்லை.
[திக்குகிறார்] நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன், ஆனால்…
[பெருமூச்சு] எனக்குத் தெரியவில்லை.
சில நேரம் என்னால் கண்டிப்பாக அதை விளக்க முடியாது.
[பியானோ இசைக்கிறது]
-[தவறான சுருதியில் வாசிக்கிறார்] -இல்லை.
மறந்துவிட்டேன்.
நான் அங்கிருந்து முதலில் வெளியேறியபோது,
எனக்கு நோய் இருந்ததை எப்படிச் சமாளிப்பது எனத் தெரிந்திருக்கவில்லை.
அது மீண்டும் நடந்தால் என்ன செய்வது?
அடுத்த முறை நான் திரும்பி வரவில்லை எனில் என்ன செய்வது?
அதைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
அதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது, எனக்கு இடி என்றால் பயம்.
நான் டெக்ஸாஸில் வளர்ந்தேன்,
இடியும் மின்னலும் வந்தால் புயல் வரும் என்று நான் மிகவும் பயப்படுவேன்.
ஆனால் என் அம்மா புயல்கள், மின்னல் மற்றும் இடி
பற்றி விளக்கும் புத்தகங்களைக் கொடுத்தார்,
மேலும் “நீ அதைப் பற்றி நிறைய அறிந்துகொண்டால்,
அதைப் பற்றிய பயம் குறையும்” என்றார்.
அது மிகவும் உதவியாக இருந்தது.
[சிறுமி கோமெஸ்] உங்களை நேசிக்கிறேன்.
-நான் உன்னை நேசிக்கிறேன். [முத்தமிடுகிறார்] -[பேசுகின்றனர்]
[கோமெஸ்] என் அம்மா எப்போதும் வாழ்க்கையைப் பார்த்து பயப்படக் கூடாது எனக் கற்றுக்கொடுத்தார்.
-அவர் ஒரு சக்திவாய்ந்த நபர். -[டீஃபி] உன் மூக்கா? கதவில் இடித்துக்கொண்டாயா?
[கோமெஸ்] அவர் மிகவும் இள வயதாக, பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்,
நாம் நினைக்கும் எல்லா வேலைகளையும் செய்ய முயன்றார்.
[டீஃபி] கண்ணே.
அவர், “அதைத்தான் நாம் அனுபவிக்கிறோம், ஆனால் நான் நிற்கப் போவதில்லை.
நான் பின்வாங்கப் போவதில்லை. என் வாழ்வை இதைவிடச் சிறப்பாக்குவேன்” என்றார்.
[டீஃபி] ஓ, இதோ ஒன்று. “வீட்டிலேயே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 145 டாலர்.
உங்கள் பகுதியில் இருக்கும் உள்ளூர் நிறுவனத்திற்கு அஞ்சல்களை செயலாக்க வேண்டும்”.
-ஆம். ஹேய், என்னால் அதைச் செய்ய முடியும். -[மழலையாகப் பேசுகிறாள்]
[கோமெஸ்] என் அம்மா…
அவர் ஹை ஸ்கூலில் படிக்கும்போது நான் பிறந்தேன்.
[மழலையாகப் பேசுகிறாள்]
அப்பா?
[கோமெஸ்] என் ஐந்து வயதில் என் பெற்றோர் பிரிந்துவிட்டனர்.
என் தாத்தா பாட்டிகள்தான், என் அம்மா வேலை செய்தபோது என்னைப் பார்த்துக் கொண்டனர்.
…நீ தாத்தா பற்றி பாட்டு பாடினாயே?
[தெளிவின்றிப் பாடுகிறாள்]
[பாடுகிறாள், மழலையாகப் பாடுகிறாள்]
[சிறுமி கோமெஸ்] ஹாய், அப்பா.
[கோமெஸ்] என் அப்பாவிற்கு இருந்த அழுத்தத்தை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
தெரிகிறது.
[கோமெஸ்] அவர் நிறைய வருத்தப்பட்டார்,
அவர், “மன்னித்துவிடு, மகளே. நான்…
உன்னிடம் எப்படிப் பேசுவது எனத் தெரியவில்லை” என்பார். [விசும்புகிறார்]
ஆனால் அவர், நான் தான் மிகவும்
அழகான இளம் பெண் என உணர வைத்தார்.
என்னால் எதுவும் செய்ய முடியும் என்று, வேறு யாரும் மதிப்பானவர்கள் இல்லை… [விசும்புகிறார்]
அதனால், அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்…
ஆனால் அது அவருக்குத் தெரியும்…
அவளைப் படமெடுங்கள், பிறகு எங்களைப் படமெடுக்க வேண்டும், சரியா?
-[டீஃபி] அங்கே போ. -இருங்கள், நான் வருகிறேன்.
நான் படமெடுக்கப் போகிறேன்.
[இருவரும்] எப்போதும் நண்பர்கள்.
[டீஃபி] அவ்வளவுதான் சொல்ல வேண்டுமா?
சரி. [கிசுகிசுக்கிறாள்]
[கோமெஸ்] பிரிஸில்லா என் கசின்,
என் அம்மாவுக்குப் பிறகு, எனக்கு மிகவும் நெருக்கமான நபர் அவள்தான்.
நாங்கள் அனைத்தையும் ஒன்றாகச் செய்தோம்.
[இருவரும் பேசுகின்றனர், சிரிக்கின்றனர்]
இன்று வரை, அவள்தான் என் வாழ்க்கை. அவள் என் ரத்தம்.
நாங்கள் அவற்றுக்கு மீண்டும் செல்லவேயில்லை.
கிராண்ட் பிரைரி
-[டீஃபி] எங்கே செல்கிறோம்? -எதுவும்…
-ஸ்வீட் டீ சாப்பிட சிக்கன் எக்ஸ்பிரஸ் செல்கிறோம். -[டீஃபி] சரி.
[காஸ்மே] உங்களுக்கு ரோல் பிடித்தால், அங்கே ரோல்கள் உள்ளன.
இல்லை, நாம்… [சிரிக்கிறார்] எனக்கு ஸ்வீட் டீதான் வேண்டும்.
-[கோமெஸ்] இரு, நமக்கு மூன்று வேண்டும். -[காஸ்மே] மூன்று, ம், பெரிய ஸ்வீட் டீ…
-ஒன்றில் கூடுதல் ஐஸ். -[கோமெஸ்] பிளீஸ், சார்?
[அட்டெண்டன்ட்] கண்டிப்பாக.
-நான் பேசும்போது அப்படி நீ பேசக் கூடாது. -நீ “பிளீஸ்” சொல்லவில்லை.
நான் சொல்லலாம் என்று இருந்தேன்.
[கோமெஸ்] நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும்,
எனக்கு நினைவிருக்கும் இடங்களுக்கு எப்போதும் செல்வேன்.
ஏனெனில் எனது அந்தப் பகுதியை நான் இழக்க விரும்பவில்லை.
[காலிங்பெல் சத்தம்]
[தோழி] நீ இங்கே செல்வாயா?
-[காலிங்பெல் சத்தம்] -[ஸ்பீக்கர் வழியாக வரவேற்பாளர்] பீப்!
-[வரவேற்பாளர் பேசுகிறார்] -ஹாய்…
நீங்கள் உள்ளே வர வேண்டுமெனில், உங்களது டிரைவர் லைசன்ஸை நான் பார்க்க வேண்டும்.
-டிரைவர் லைசன்ஸா? -ஆம்.
-சரி. -[தோழி] இதோ. எடுத்துக்கொள்.
-அங்கிருக்கும் அனைவருக்கும் வேண்டும். -ஓ.
[சிரிக்கிறார்] என்னிடம் இல்லை.
சரி, விடுங்கள். [திக்குகிறார்] என் சிறுவயதில் நான் இங்கே செல்வேன்.
ம், என் பெயர் செலீனா, உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் நன்றி.
-பரவாயில்லை. -பை.
சரி, பை.
[தோழி] அவளிடம் உள்ளது.
[பதிவாளர்] உங்களிடம்…
உங்களில் யாரிடம் டிரைவர் லைசன்ஸ் உள்ளது?
-அனைவரிடமும். -[தோழி] எங்களிடம் உள்ளது.
-[மிங்கஸ்] இவள் இங்கே படித்தவள்… -நான் இங்கே படித்துள்ளேன்,
-நான் இங்கே… -[பதிவாளர்] கவலை வேண்டாம்.
[மிங்கஸ்] நீங்கள் இங்கே ஆசிரியராக உள்ளீர்களா?
-[திக்குகிறார்] நான் இங்கே பதிவாளர். -ஓ, புரிந்தது.
ஆம், நான் அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.
[அலுவலக உதவியாளர்கள் கூச்சலிடுகின்றனர்]
[கோமெஸ்] ஹாய், நண்பர்களே.
அனைவரும் அமைதியாக இருங்கள்.
நீங்கள் அலுவலக உதவியாளர்களா? உங்களுக்கு என்ன வயது?
[அனைவரும்] 13.
[கோமெஸ்] அருமை. நான் இங்கே படித்தேன் எனத் தெரியுமா?
-[அனைவரும்] ஆம். -[கோமெஸ்] அப்படியா?
சரி. எனக்கு டிலன் ஆல்வராடோ மீதுதான் கிரஷ் இருந்தது, ம்…
தொடக்கப்பள்ளியில் சாமி மீது இருந்தது.
சரி. தொடக்கப்பள்ளியில் சாமி ராட்ரிகஸ் மீது.
-பிறகு டிலன் ஆல்வராடோ, கீத் மாபின்… -கீத்.
அதில் எலியும் இருக்கிறான்.
ஹ்ம்ம். இல்லை. உண்மையாகவா?
-ஆம். -சரி.
பிறகு டேனி ஜோன்ஸில் இருக்கும் மேத்யூ.
அவ்வளவுதான்.
அதில் ஒருவர் கூட என்னை விரும்பவில்லை.
-ஆனால், அவர்கள் அதை நினைத்து வருந்துவார்கள். -ஆம், இருந்தாலும் கூறினேன். [சிரிக்கிறார்]
[காஸ்மே] அவள் வளரும்போது தனிமையாக இருந்தாள், தெரியுமா?
பள்ளியில், அவள் நிறைய பேரிடம் பேசியதில்லை.
அவளுக்கு இரண்டு அல்லது மூன்று நண்பர்கள்தான் இருந்தனர்,
ஆனால் நிறைய பாய்ஃபிரண்டுகள் இல்லை. [சிரிக்கிறார்]
நான் அங்கே சென்று தான் என் உணவை எடுத்துக்கொண்டு,
இங்கே நீளமான மேசையில் அமர்ந்து சாப்பிடுவேன்.
-வழக்கமாக தனியாகத்தான் சாப்பிடுவேன். -[தோழி] இல்லை…
[மாணவர்கள் வரவேற்கின்றனர்]
-ஹாய், என் பெயர் செலீனா. -[மாணவர்] நான் உங்களை முன்பே பார்த்தேன்.
உங்களால் முடியாது என நினைக்கும் எதுவும்
உங்களைத் தவிர வேறு யாரும் முடியாது என்று சொல்ல முடியாது.
நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய தொடர்ந்து முயல வேண்டும்.
-அது உத்வேகமாக உள்ளது. -அதனால்… ஓ, நான்…
-அப்படியா? -அருமை.
-[மாணவர்கள் கைதட்டுகின்றனர்] -புகுந்து விளையாடுங்கள்… ஓ, மன்னிக்கவும்.
-[சிரிக்கின்றனர், கூச்சலிடுகின்றனர்] -பள்ளி முடிந்தபின் நீங்கள் இருக்க வேண்டும்.
ஹலோ, டேனி ஜோன்ஸ் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களே.
நான் செலீனா கோமெஸ் பேசுகிறேன்.
உங்கள் வகுப்புகளை இடையூறு செய்ய அனுமதித்ததற்கு நன்றி.
உங்கள் ஆசிரியர்கள் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என நினைவூட்டுகிறேன்.
நீங்கள் கடினமாக உழைத்தால் போதும். [சிரிக்கிறார்]
நீங்கள் அவனைக் கட்டிப்பிடிக்க வேண்டும். அவன் அழப் போகிறான்.
-[மாணவர் 1] எனக்கு ஆட்டோகிராஃப் கிடைக்குமா? -அவன் மிகப்பெரிய ரசிகன்.
[மாணவர் 2] அடக் கடவுளே!
இருக்கட்டும்.
-என்னையும் கட்டிப்பிடிக்க முடியுமா? -[மாணவர் 3] என்னையும் கட்டிப்பிடிக்க முடியுமா?
[மாணவர்கள் கூச்சலிடுகின்றனர்]
-[கோமெஸ்] இங்குதான்… -[மிங்கஸ்] எனக்குத் தெரியவில்லை.
…நான் வளர்ந்தேன்.
அதுதான் என் வீடு.
-[மிங்கஸ்] அப்படியா? -[கோமெஸ்] ஆம்.
[மிங்கஸ்] உனது கைரேகைகள் அங்கே கண்டிப்பாக இருக்கும்.
இந்த இடத்தில்தான்…
அவர்கள் பாவம், ஏனெனில் அங்கேதான் யாரோ ஒருவர் போதை மருந்துகள் விற்பார், நாங்கள்
அந்த ஜன்னல்கள் வழியே பார்ப்போம், ஏனெனில் வெளியே வர எங்களுக்கு அனுமதியில்லை.
-அவர்களை நினைத்து பாவப்பட்டுள்ளேன்… -[காஸ்மே] ஆம்.
…ஏனெனில் அவர் தனது பழைய காரை அங்கே நிறுத்துவார்,
அந்த டிரன்க்கில் இருந்து… [நாக்கைச் சொடுக்குகிறார்]
-இது அதே கதவுதான். -ஓ.
ஹாய்.
-[வீட்டு உரிமையாளர்] ஹாய். [சிரிக்கிறார்] -ஹாய், என் பெயர் செலீனா.
-எப்படி இருக்கிறீர்கள்? -எப்படி இருக்கிறீர்கள்?
-[வீட்டு உரிமையாளர்] நலம். உள்ளே வாருங்கள். -வரலாமா?
-[வீட்டு உரிமையாளர்] கண்டிப்பாக. -சரி.
அடக் கடவுளே.
சரி, இங்குதான் நான், ம்,
-மீனை சுத்தம் செய்வேன். -[மிங்கஸ்] மீனை சுத்தம் செய்வாய்.
[கோமெஸ்] ஆம்.
[டீஃபி] செலீனா, அவர் என்ன செய்கிறார்?
அவர் வெட்டி ரத்தத்தை எடுக்கிறார்.
-இதுதான் என் படுக்கையறை. -[வீட்டு உரிமையாளர்] அது அசுத்தமாக உள்ளது.
இந்த அலமாரியில் நான் வரைந்தவை உள்ளனவா எனப் பார்க்கலாமா?
ஓ, அவர்கள் அதை எடுத்துவிட்டனர்.
-[காஸ்மே] அது இல்லையா? -ஆம்.
எனக்கு கோல் மற்றும் டிலன் ஸ்ப்ரௌஸ் மீது கிரஷ் இருந்தது, அதனால்
நான் இங்கே வந்து என் அலமாரியில் எழுதி வைப்பேன்.
-[காஸ்மே] இல்லை. -நன்றி.
-இதில் எழுதியது உள்ளது. -அப்படியா?
நீங்கள் கோலை மிகவும் நேசித்துள்ளீர்கள் போல.
-[காஸ்மே, வீட்டு உரிமையாளர் சிரிக்கின்றனர்] -கடவுளே! அற்புதம். [திகைக்கிறார்]
அதாவது… நீ இதைப் பார்க்கிறாய் எனில், மன்னித்துவிடு, கோல்.
கோல் ஸ்ப்ரௌஸ் செலீனா கோலை விரும்புகிறாள்
[காஸ்மே] நான் உட்கார…
-ம், கிறிஸ்டியனாவா? -அப்படியா?
இங்கேதான்… என் பாட்டி உனக்கு ஃபோட்டோ காட்டுவார்.
அவர் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் என்னை பார்னி நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்தது தெரியவந்தது.
-[கிறிஸ்டியனா] கடவுளே. -[காஸ்மே] நீ ஃபோனில் இருந்தாய்.
இங்கே இருக்கும் எனது படம் உள்ளது.
எல்லாம் அற்புதமாக உள்ளது, பார்னி.
♪ அவள் மீண்டும் வருவாள்… ♪
[கோமெஸ்] எனது முதல் வேலை கிடைத்தபோது எனக்கு ஏழு வயது.
எனக்குப் பெருமையாக இருந்தது, ஏனெனில் என் வாழ்க்கையில் இருந்து தப்பித்து, பார்னி உலகத்தில்
விளையாடலாம், பாடலாம்.
இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
பிறகு நான் நிறுத்தவேயில்லை. தொடர்ந்து முன்னே சென்றேன்.
பிறகு எனக்கு 11 வயதாகி, நான் லாஸ் ஏஞ்சலஸுக்கு குடியேறியபோது,
நான் வேலை செய்ய விரும்பினேன். என் வேலையை நான் நேசித்தேன்.
ஆனால் இறுதியில், இதை நீண்ட காலத்திற்குச் செய்த பிறகு,
நான் முக்கியமற்றதாக உணர்ந்தேன்.
அது என்னை எப்படியோ தனிமையாக உணர வைத்தது.
பிறகு நான் டூர் செல்லத் தொடங்கியதும், அது இன்னும் மோசமாகியது.
நான் கடைசி சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறிய பிறகு,
எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது இணைந்திருப்பதுதான் எனத் தெரிந்தது.
இது ஜாய்ஸ்.
பிரிஸில்லா, நிச்சயமாகவா?
[காஸ்மே] ஆம். என் பாட்டியிடம் கேட்க வேண்டுமா?
நான் மிகவும் விரும்பிய ஒரு பொம்மை வீடு இவரிடம் இருந்தது.
[காஸ்மே] அதனால்தான் அவரது வீட்டின் முன்புறம் குப்பையைப் போட்டாயா?
-நிறுத்து. அது சார்லி. -[சிரிக்கிறார்]
அவர்கள் எப்போதும் அவரிடம் விளையாடுவார்கள்.
ஹாய்.
-ஹாய், நான் செலீனா. -அப்படியா?
ஜாய்ஸ் இங்கே வசித்தபோது நான் இங்கே வந்துள்ளேன்.
-செலீனா கோமெஸா? -ஆம்.
ஆம்.
ஆம். [சிரிக்கிறார்]
அவர் இங்கே இருக்கிறாரா?
ஆம். அவர், ம்… நீங்கள் உள்ளே வருகிறீர்களா?
-நிச்சயமாகவா? -ஆம்.
சரி.
உங்களிடம் அந்த பொம்மை வீடு…
-[காஸ்மே] இன்னும் உள்ளதா? -வேறு யாரையும் உள்ளே விடாதீர்கள்.
-[கோமெஸ் திகைக்கிறார்] -[ஜாய்ஸ்] எப்படி இருக்கிறாய்?
-அடக் கடவுளே. நகராதீர்கள். -[ஜாய்ஸின் கணவர்] நன்றி.
-[ஜாய்ஸ்] நான் போக வேண்டும். -[காஸ்மே] அந்த பொம்மை வீடு அதோ உள்ளது, செலீனா.
ஹாய், அதுதான்… அதுதான் பொம்மை வீடு! எழுந்திருக்காதீர்கள்.
[ஜாய்ஸ்] என்னால் எழுந்திருக்க முடியவில்லை, குழந்தை.
-[கோமெஸ்] பரவாயில்லை. -எனது வழுக்கைத் தலை பிடித்துள்ளதா?
ஆம், அழகாக உள்ளீர்கள்.
அதைக் கடந்துவிட்டேன், ஆனால் இந்த ஆண்டில் இரண்டு முறை கணுக்காலை உடைத்துக்கொண்டேன்.
-என்னால் எழுந்திருக்க முடியாது. -ஆம், என்ன நடக்கிறது?
பெரிதாக ஒன்றுமில்லை.
ஹ்ம்ம். நான் வருந்துகிறேன்.
என் கால் விரலை உடைத்துக்கொண்டேன்.
உனது உடல்நலம் எப்படி உள்ளது?
[கோமெஸ்] நான் நலமாக உள்ளேன். என் லூப்பஸ் குறைந்து வருகிறது.
-நல்லது. -அதற்கு மகிழ்ச்சியாக உள்ளேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நடந்தது,
அதிலிருந்து எல்லாம் நன்றாக உள்ளது.
-நல்லது. -ஆம்,
-நான் தினமும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். -லூப்பஸும் எம்எஸ்ஸும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
அப்படியா? எனக்கு அது தெரியாது.
நிறைய அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்கும். அது ஒரு ஆட்டோ இம்யூன் நோய்.
-அப்படியா? -என்னைப் பற்றி என்ன நினைவுள்ளது?
எனக்கு… [பெருமூச்சு] நாங்கள் இங்கே வரும்போது, நானும் சார்லியும்
உங்களுக்கு தொல்லை கொடுப்பது நினைவுள்ளது.
சரி. [சிரிக்கிறார்] இது சுய வாக்குமூலம்.
ஆம். நான் அதற்காக மன்னிப்பு…
அதைப் பற்றி வேறெதுவும் நினைவில்லையா?
இல்லை, உள்ளது. நீங்கள் எங்களை உள்ளே அழைத்து,
குக்கீகள் கொடுப்பீர்கள், நான் அங்கே சென்று…
அங்குதான் நீங்கள் எனது குக்கீகள் என்று சொல்லக் காத்திருப்பேன்.
-ஓ, நினைவுள்ளது. அதை வைத்து விளையாடுவோம். -குக்கீ பெண்மணி.
-போன முறை அது இங்கே இருந்தது என நினைக்கிறேன். -ஆம்.
சரிதான்.
-[ஜாய்ஸ் பேசுகிறார்] -[கோமெஸ் சிரிக்கிறார்]
அடக் கடவுளே. எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது, ஜாய்ஸ்.
-உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. -[ஜாய்ஸ்] நீ இங்கே வந்ததில் எனக்கு…
நீ இங்கே வந்து என்னைப் பார்க்க முடியுமா என டெப்பியிடம் கேட்டேன்.
-நான் வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். -ஆம்.
-ம்ம் ஹ்ம்ம். -நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
இல்லை.
[ஜாய்ஸ்] உனக்கும் உடல்நிலை சரியில்லை.
[கோமெஸ்] ஓ, பரவாயில்லை. நாம் அனைவரும் அதைக் கடப்போம்.
-மிக்க நன்றி. -உங்கள் நாள் சிறப்பாக இருக்கட்டும்.
-உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். -சரி, நன்றி.
[காஸ்மே] பை, ஜாய்ஸ்.
-பை, செலீனா. -[கோமெஸ்] பை. மிக்க நன்றி.
-[கேமரா நபர்] நன்றி. -[கோமெஸ்] உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
[கேமரா நபர்] நன்றி, நண்பர்களே.
[ஜாய்ஸ் பேசுகிறார்]
[கோமெஸ் சிரிக்கிறார்] கண்டிப்பாக.
[பெருமூச்சு]
எனக்கு லூப்பஸ் வந்தபோது, அது மிகவும் பயமாக இருந்தது.
நான் அதிலிருந்து மீண்டதும்,
”நான் சென்று இந்த மக்களைச் சந்திப்பேன், ஏனெனில் எனக்கு இது இருந்தது” என்று கூறினேன்.
ஹாய், பேபி.
பிறகு எனக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது, நாங்கள் நிறைய வேலை செய்தோம்.
பிறகு மனநலப் பிரச்சினை வரத் தொடங்கியபோது,
நான் என்னிடம் கூறிய அதே விஷயம், “இப்போது என்னால் இவர்களைப் புரிந்துகொள்ள முடியும்”.
-எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கின்றன. -சரி. பை, நண்பர்களே.
[கோமெஸ்] நீ நீயாகவே இரு, செலீனா.
முயற்சி செய்வதை நிறுத்து.
நீ என்ன செய்கிறாய் என யாருக்கும் அக்கறையில்லை.
இது நான் யார் என்பதைப் பற்றியது. நான் இருக்கும் இடத்தில் நன்றாக இருக்கிறேன்.
என் குடும்பத்திற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
என் நண்பர்களுக்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
உயிருடன் இருப்பதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
நான் எழுதிய இன்னும் மூன்று பத்திகளைச் சேர்க்கப் போகிறேன்.
”நாம் உண்மையைச் சொல்லும்போது நாம் சிறப்பாக இருக்கிறோம்,
-மீண்டும் நான் உண்மையைச் சொல்கிறேன்.” -[ரைட்] ஆம்.
”நான் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன்,
அனைத்தையும் சமாளித்து என்னால் இருக்க முடியவில்லை.
இருந்தாலும் எனது வலி, கவலை, பயம் ஆகியவை என்னைப் பாதித்தாலும்,
அது என் வாழ்க்கையின் மிகவும் பயங்கரமான தருணங்களில் ஒன்று.
எனக்கு பைபோலார் இருப்பதை… அன்றுதான் கண்டறிந்தேன்.”
[ரைட்] நீ பைபோலார் என்று சொல்ல வேண்டும் என யாரும் நினைக்கவில்லை.
உனக்கு 27 வயதாகிறது,
அதை வெளிப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என நீ நினைக்கும் வரை,
அதைச் சொல்ல உன் வாழ்நாள் முழுக்க நேரம் உள்ளது.
-சரி. -யாரும் அதற்கு எதிராக இல்லை.
அதில்தான் மக்கள் கவனம் செலுத்துவார்கள்.
அதன் பொருள்… என்ன?
சில நபர்களோ இயக்குநர்களோ என்னுடன் வேலை செய்ய விரும்பாமல் போகலாம்?
ஆனால் பிறகு நான் ஏன் அவர்களுடன் வேலை செய்ய விரும்பப் போகிறேன்?
-[மரினோ] உண்மை. நீ நினைப்பதைச் செய். -நான் இதைச் சொல்லப் போகிறேன்.
-[மரினோ] சரி. -நான் சொல்லப் போகிறேன். பரவாயில்லை.
-அவ்வளவுதான். -[ரைட்] அது… சரி.
[ரேடியோ ஹோஸ்ட்] செலீனா கோமெஸ் தனது சிரமங்கள்…
பாஸ்டன்
-…பற்றி வெளிப்படையாக… -[ரேடியோ ஹோஸ்ட் 2] …அந்த நட்சத்திரம்
கவலை மற்றும் மன அழுத்தத்துடனான தனது போராட்டம் பற்றியும்,
அந்தப் பயணத்தைப் பற்றியும்…
[முனகுகிறார்] எனக்கு 20 நிமிடங்கள் கிடைக்குமா?
-[கேமரா நபர்] பதட்டமாக இருக்கிறீர்களா? -[முனகுகிறார்] நான் சிறப்பாக உணரவில்லை.
[ரைட்] அது பதட்டமா?
[கோமெஸ்] நான் கொஞ்சம் கூட சிறப்பாக உணரவில்லை.
-[தோழி] அவளுக்குப் பசிக்கிறதா? -[கோமெஸ்] அசௌகரியமாக உள்ளது.
-[ரைட்] என்ன? -என்ன நடந்தது?
அல்லது பதட்டமாக உள்ளது.
புரிகிறது.
அது என்ன செய்தது?
-அது உனக்கு குமட்டலை ஏற்படுத்தும். -இது எரிகிறது.
ஆம்.
ஹாய், ரகெல்.
[ஸ்டீவன்ஸ்] ஹலோ, செலீனா.
[ரைட்] ரகெல், இது அழகாக உள்ளது. இது ஒன்-பீஸ் உடையா, அல்லது டூ-பீஸா?
[ஸ்டீவன்ஸ்] இல்லை. இது… கிறுக்குத்தனமாக உள்ளது…
[பார்வையாளர்கள் கைதட்டுகின்றனர்]
[ஹோஸ்ட்] மிகவும் மகிழ்ச்சியுடன் நான் உங்களை மெக்லீன் மனநல
மருத்துவமனை வருடாந்திர டின்னருக்கு வரவேற்கிறேன்.
ஹாய், நண்பர்களே. ம், இங்கே இருப்பதில் நான் மகிழ்கிறேன்.
நான் கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம், மன்னிக்கவும். [சிரிக்கிறார்]
ம், ஆம். நான் என் ஏழு வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்,
விரைவாகவே அதற்குப் பழகிக் கொண்டேன்.
எனக்கு நினைவிருக்கும் வரை வேலையையும் பள்ளியையும் ரிலேஷன்ஷிப்பையும்
மாறி மாறி சமாளித்தேன்.
என் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், உள்ளே நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.
போன ஆண்டு, நான் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கஷ்டப்பட்டேன்,
என்னால் அவற்றைச் சமாளிக்க முடியவில்லை.
நான் உதவியைத் தேடினேன்,
டாக்டர்கள் எனக்கு என்ன பிரச்சினை என்று தெளிவாகக் கூறினார்கள்.
அந்தத் தகவல் கிடைத்த உடனேயே,
நான் ஏன் பல ஆண்டுகளாக மன அழுத்தம் மற்றும் கவலையால் சிரமப்பட்டேன்
என்பது எனக்கு விளங்கியது.
அதனால் அதை நான் நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கினேன்,
இளம் வயதில் என் அம்மா பயங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளக் கற்றுக்கொடுத்தது போல.
நான் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளேன்,
மேலும் என் உணர்வுகளையும் எண்ணங்களையும் என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.
-மிகவும் மகிழ்ச்சி. நன்றி. -[கூட்டத்தினர் கைதட்டுகின்றனர்]
[சிரிக்கிறார்]
அதைக் கூறுவது நன்றாக உள்ளது, ஏனெனில் நான் மனதாரக் கூறுகிறேன், புரிகிறதா?
பல ஆண்டுகளுக்கு, அதை நான் கூற வேண்டியிருந்திருக்கலாம்,
ஆனால் இந்த முறை மனதாரக் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது.
ம், நான் என் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் சில நேரம் சிரமப்படுவேன்,
ஆனால் அதற்காக நான் குறை உடையவள் ஆகிவிட மாட்டேன்.
இது என்னை பலவீனமாக்கிவிடாது.
இது என் மதிப்பைக் குறைத்துவிடாது.
இது என்னை மனிதனாக்கும்.
அதுதான் என் வாழ்க்கையாக இருந்தது, அதை நீங்கள் வெளியே கொண்டு வந்தது…
மனநலம் பற்றிய விழிப்புணர்வை யாராவது கூற முடியாமல் இருந்தால்
அது மாற்றத்தை ஏற்படுத்தாது.
என் மனதாரச் சொல்கிறேன், உங்கள் துணிச்சல் அற்புதமானது,
நீங்கள் உயிர்களைக் காப்பாற்றுகிறீர்கள். நீங்கள் உயிர்களைக் காப்பாற்றும்
-பணிக்கு மிகவும் நன்றி. -அருமை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்
ஒரு பகுதியாகத்தான் நான் இருக்கிறேன், புரிகிறதா?
கண்டிப்பாக, நன்றி. இது மிகவும் பெருமையானது.
நீங்கள்தான் உயிர்களைக் காப்பாற்றுகிறீர்கள், ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்,
-இங்கே இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. -நன்றி.
உங்கள் மனநலம், மன அழுத்தம் மற்றும் கவலை அனுபவம் குறித்து பொதுவெளியில்
-பேசுவது என்பது உங்களுக்கும் கூட… -ஆம்.
நானே மூன்றாண்டுகளுக்கு முன் அக்டோபரில் தற்கொலைக்கு முயன்றேன்,
எனக்கு… ஓ, நன்றி. [சிரிக்கிறார்]
[கோமெஸ்] அன்றிரவு நேர்மையாகப் பேசியது உதவியாக இருந்தது.
நான் ஜூலியா மைக்கேல்ஸுக்கும் ஜஸ்டின் ட்ரான்டருக்கும் மெசேஜ் செய்தேன்,
”நான் சோகமாக உள்ளேன் எனக் கூற தயாராக உள்ளேன்” என்றேன்.
நாங்கள் அந்தப் பாடலை 45 நிமிடங்களில் எழுதினோம். நான் எழுதியதிலேயே சீக்கிரம் எழுதிய பாடல்.
அது தோல்வியடைந்த காதலைத் தாண்டியும் கூறுவது. அது நான் என்னைத் தேர்வுசெய்யக் கற்றுக்கொள்வது.
வாழ்க்கையைத் தேர்வுசெய்ய.
[பியானோவில் ”லூஸ் யூ டு லவ் மீ” இசைக்கிறது]
ஆனால் மக்களும் அதில் கருணையும் அமைதியும் பெறும் நம்பிக்கையுடன் எழுதியது.
♪ நீ அனைத்தையும் தருவதாக உறுதியளித்தாய் நான் அதை நம்பினேன் ♪
♪ நான் உனக்கு முன்னுரிமை அளித்தேன், நீ அதை விரும்பினாய் ♪
-[அழுகிறாள்] அப்பா. -♪ என் காட்டை நீ எரிக்கிறாய் ♪
♪ நான் அதை எரிய விட்டேன் என் கோரஸில் தவறான சுருதியில் பாடினாய் ♪
♪ ஏனெனில் அது உன்னுடையது இல்லை ♪
♪ நான் அறிகுறிகளைப் பார்த்தும் அதைப் புறக்கணித்தேன் ♪
-[பாடல் தொடர்கிறது] -அந்தப் பாடலானது நீங்கள் உங்களை
முழுவதும் இழப்பது பற்றியது.
♪ என் நோக்கத்தை எரிக்கிறாய் ♪
உங்களை மீண்டும் கண்டறிவதற்கானது.
♪ வலி உங்களுடையது இல்லை எனும்போது அதை நீங்கள் ரசிப்பீர்கள், ஆம் ♪
[செய்தியாளர்கள் கூச்சலிடுகின்றனர்]
[செய்தியாளர்] இன்னும் நீங்கள் ஜஸ்டினை நேசிக்கிறீர்களா?
[கோமெஸ்] அனைத்தும் பொதுவெளியில் இருந்தன.
[பாப்பராஸோ] செலீனா, பீபரின் நிச்சயம் பற்றி எதுவும் கூறுகிறீர்களா?
[பாப்பராஸோ 2] பீபர் பற்றி உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
நான் கொஞ்சம்… சாப்பிடச் செல்லலாமா? நீங்கள்… நான் சாப்பிட வேண்டும்.
யாரும் கைவிட விரும்பாத கடந்தகால உறவால் துன்பப்பட்டேன்.
ஆனால் பிறகு நான் அதைக் கடந்துவிட்டேன்.
நான் அதன் பிறகு பயப்படவில்லை.
-அனைவருக்கும் நன்றி. பை, நண்பர்களே! -[குழு உறுப்பினர்] சரி, நண்பர்களே. ம்,
-அது ஒரு கேமரா ராப். -நன்றி.
[கூச்சலிடுகின்றனர்]
அதில், “செலீனா கோமெஸ் இப்போது
பில்போர்ட் ஹாட் 100 இன் சிறந்த 20 பேரில் நுழைந்துள்ளார். இதன் மூலம் அவரும்
அடெலும் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலட் அறிமுகம் பெறும்
-பெண்களாகின்றனர்” என்றுள்ளது. -[மிங்கஸ்] ஆம்.
-[ஸ்டீவன்ஸ்] ஆம். -நான் அழ விரும்புகிறேன்.
[ரசிகர்கள் கத்துகின்றனர்]
-அதுதான் உங்களது மிகவும் பிரபலமான பாடலா? -ஆம்.
-அதுதான் இதுவரை உங்கள் மிகவும் பிரபலமான பாடலா? -[கூட்டத்தினர் ஆரவாரம்]
[கோமெஸ்] நான் முடிந்தவரை நேர்மையாக இருக்க விரும்பினேன்,
மக்களை சிறப்பாக உணர வைக்க முடியும் இடத்தில் நான் இருப்பது
மிகவும் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.
நான் மிகவும் மோசமான மனவேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது,
பிறகு அனைத்தையும் உடனடியாக மறந்துவிட்டேன்.
அது மிகவும் குழப்பமாக இருந்தது, ஆனால் அது நடக்க வேண்டியிருந்தது என நினைக்கிறேன்.
இறுதியில் அதுதான் எனக்கு நடந்ததிலேயே சிறந்த விஷயம்.
[ஜேனிக்] இறுதியில், உங்கள் மெசேஜ்…
அதுதான் எனக்கு நடந்த சிறந்த விஷயம் என்று கூறியதைக் கேட்கவேயில்லை.
-[ஜேனிக்] மன்னிக்கவும். -நீங்கள் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.
-அதை இனி கூறமுடியாது. -[ஜேனிக்] இன்னும் ஒரு முறை.
முடியாது.
சரி. என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?
[ஜேனிக்] அதுதான் உங்களுக்கு நடந்த சிறந்த விஷயமா?
[சிரிக்கிறார்]
அதுதான் எனக்கு நடந்த சிறந்த விஷயம், ஆம்.
ஆல்பம் எப்போது ரிலீஸ் ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள்?
-ஜனவரி. -[ஜேனிக்] சரி, அருமை.
நீங்கள் போக வேண்டும் என்றாலோ
-எதுவும் பிரச்சினை என்றாலோ… -நான் கென்யாவுக்கும் லண்டனுக்கும் செல்ல வேண்டும்.
-சரி. -[சிரிக்கிறார்]
அது வேடிக்கையான ஆறு வாரங்களாக இருக்கப் போகிறது.
நீங்கள் இந்த ஆண்டில், ம், ஏஎம்ஏவில் பாட விரும்புகிறீர்களா?
ஆம்.
மேலும், ம், சரி.
-அதை நாம் செய்ய விரும்பினால்… -ஆம்.
-…இப்போதே திட்டமிடத் தொடங்குவோம். -அருமை.
-சரி. -[பெருமூச்சு] என் வயிறு.
-[மார்கென்ராத்] பசிக்கிறதா? -இல்லை.
-[மார்கென்ராத்] நன்றாக இருக்கிறீர்களா? -ஆம், நரம்புகள் என நினைக்கிறேன்.
மிகவும் குளிராகவும் உள்ளது. ஸ்வெட்டர் வேண்டுமா?
-எனக்கு வெப்பமாக உள்ளது. -அப்படியா? சரி.
-எனில் நீங்கள் சரியான அறையில் உள்ளீர்கள். -ஆம்.
-இது அமேஸான் போல உள்ளது. -இது இக்லூ போல குளிராக உள்ளது.
இங்கே குளிராக உள்ளது.
-நீங்கள் என்னைக் கொல்லப் போகிறீர்கள், ஆனால்… -முதலிலிருந்து தொடங்குவோம்.
-ஆனால் நான் போக வேண்டும். -சரி.
-எனக்கு… ஆம். ஓ. -நன்றாக இருக்கிறீர்களா? மன்னிக்கவும்.
[மார்கென்ராத்] இந்தச் சந்திப்பின் மன அழுத்தம் என நினைக்கிறேன்.
[டூர் உறுப்பினர்] ம்ம், அப்படித்தான் நினைக்கிறேன்.
-[டூர் உறுப்பினர் 2] நானும் தான். -சரி.
[டூர் உறுப்பினர் 3 சிரிக்கிறார்] ஆம்.
[கோமெஸ்] இரண்டு ஆண்டுகளில் நான் மேடை ஏறவேயில்லை,
நான் தயாரா என்று இப்போதும் தெரியவில்லை.
நானாக ஒரு பாடலைப் பாட நான் பயப்பட்டால் அது இருந்து என்ன பயன்?
ஏஎம்ஏவுக்குப் பிறகு, நான் நேராக கென்யாவுக்குச் சென்றேன்.
பல ஆண்டுகளுக்கு, என் சிறுநீரக சிகிச்சையால் என் டாக்டர்கள் என்னைப் போகவிடவில்லை,
ஆனால் நான் ஒருவழியாகத் தயாராகினேன்.
ரகெலும் நானும் தொடக்கப் பள்ளியில் இருக்கும் மாணவர்களையும், இளம் பெண்களுக்கான
கல்லூரியையும் பார்க்கச் சென்றோம்.
கென்யாவில் வீ அறக்கட்டளைக்காக பணம் திரட்ட நான் உதவிய இரண்டு பள்ளிகளும்.
அது சிரமமாக இருக்கும் எனத் தெரியும்,
ஆனால் என் ஆல்பம் வெளிவரும் முன் அங்கே செல்வதற்கான ஒரே வாய்ப்பு அதுதான்.
[கத்துகிறார்]
-அவ்வளவுதான். -முடிந்ததா?
-அவ்வளவுதான், ஆம். அருமை. -[திகைக்கிறார்]
-சரி. -[நர்ஸ்] ஆழமாக மூச்சை இழுத்து, வெளியே விடுங்கள்.
[நர்ஸ் சிரிக்கிறார்]
[ஸ்டீவன்ஸ்] ஓ! ஹாய், செல்லம்!
-[கோமெஸ்] நீ அதைச் செய்தாயா? -ஆம்.
-அருமை. -நான் படுத்திருக்கிறேன்.
உனக்கு வலிக்கிறதா?
ஆம், என் கை பலவீனமாக உள்ளது.
ஓ, மைலான்டா
-இப்போது நான் பட்ட பாடு உனக்குத் தெரியும். -ஆம். நீ மிகவும் கஷ்டப்பட்டாய்.
நான், “இல்லை, உனக்குத் தெரியாது” எனக் கூற வந்தேன்.
[சிரிக்கிறார்]
-இருந்தாலும், உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். -நன்றி.
[செய்தியாளர்] செலீனா கோமெஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏஎம்ஏ மேடை நிகழ்ச்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுதான்…
நிகழ்ச்சி ஒரு நாள் முன்பு
…அவரது முதல் நிகழ்ச்சி,
பீபர் விஷயம் மற்றும் சிறிய ஓய்வுக்குப் பிறகு நடப்பது.
♪ நான் அறிகுறிகளைப் பார்த்தும், அதைப் புறக்கணித்தேன் ♪
♪ ரோஸ் நிற கண்ணாடிகள் சிதைந்தன ♪
♪ எனது காட்டை… ♪
[முனகுகிறார்]
[கோச்] அந்த சுருதிதான் முக்கியம்.
அதனால் நீ அதிகமாக யோசிக்காமல், அதன் போக்கில் விட்டால்,
அது சாதாரணமாக வரும்.
நீ உன்னை நம்ப வேண்டும்.
செல், நாம் இப்போது வேறோன்றைப் பாடப் போகிறோம்.
-இதை நாம் பாட வேண்டும். -சரி.
தொடங்கு.
-சத்தமாக! -இது என் பாடல் இல்லை.
இது எனக்கு சுத்தமாக நினைவில்லை.
அது முக்கியமில்லை. உனக்குத் தெரிந்ததைப் பாடு.
[லாரென் டைகிள், கோமெஸ்] ♪ என் மனதிலிருக்கும் குரல்களுடன் போராடுகிறேன் ♪
♪ நான் திறமையற்றவள் எனக் கூறும் குரல்களுடன் ♪
அப்படித்தான்!
♪ நான் சிறப்பானவள் இல்லை ♪
♪ என்று கூறும் ஒவ்வொரு பொய்யும் ♪
[பெருமூச்சு]
கடவுளே எனக்கு உதவு.
[கூட்டத்தினர் கூச்சலிடுகின்றனர்]
[”லூஸ் யூ டு லவ் மீ” இசைக்கிறது]
♪ நீ அனைத்தையும் தருவதாக உறுதியளித்தாய் நான் அதை நம்பினேன் ♪
♪ நான் உனக்கு முன்னுரிமை அளித்தேன், நீ அதை விரும்பினாய் ♪
♪ என் காட்டை நீ எரிக்கிறாய் ♪
♪ நான் அதை எரிய விட்டேன் என் கோரஸில் தவறான சுருதியில் பாடினாய் ♪
♪ ஏனெனில் அது உன்னுடையது இல்லை ♪
[செய்தியாளர் 1] செலீனா கோமெஸ் முன்பு பேனிக் அட்டாக்கால் பாதிக்கப்பட்டுள்ளார்…
[செய்தியாளர் 2] அவர் தவறான சுருதியில் பாடுவதற்கு பலர் அவரை…
[செய்தியாளர் 3] கோமெஸ், தனது பத்தாண்டு
அனுபவம் மற்றும் பல லட்சங்கள் சம்பாதித்த பிறகும் பாடக் கற்றுக்கொள்ளவில்லை.
[செய்தியாளர் 4] …நான்கு ஆண்டுகளில். ஆனால் கவலை மறையவில்லை.
அவரது லூப்பஸ் அவருக்கு கவலையை அதிகப்படுத்துவதாகக் கூறுகிறார்.
[டீஃபி] ஹாய். அவர் எழுந்துவிட்டார்.
-[ஸ்டீவன்ஸ்] ஹாய். -[கோமெஸ்] ஹாய்.
[ஸ்டீவன்ஸ்] ஆ. எப்படிப் போகிறது?
[தோழி] ஹேய், சர் வின்னி. [முத்தமிடுகிறார்]
உனக்கு சூப் வாங்கி வந்துள்ளேன், ம்… [தெளிவின்றிப் பேசுகிறார்] …மேலும்,
ஹாம் அண்ட் சீஸும் வாங்கி வந்துள்ளேன்.
[மிங்கஸ்] அலீன் என்னிடம் கென்யாவுக்குப் பிறகு லண்டன் ப்ரோமோ செய்தபோது,
நான் அங்கே மூன்று நாட்கள் இருந்ததாகக் கூறினார்.
மேலும் ஒரு நாள் பாரிஸில் பாடிவிட்டு வீட்டுக்குச் செல்லலாமா எனக் கேட்டார்.
-என்னுடன் வருகிறாயா, ரகெல்? -[ஸ்டீவன்ஸ்] சரி.
சரி.
[மிங்கஸ்] அப்படியா? அது அதிகம் என நினைக்கவில்லையா?
ம்ம், இல்லை, ஆனால் நான் அதை அவசரப்படுத்தவும் விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக ப்ரோமோ செய்யவில்லை.
அதுதான் எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம்.
[ஸ்டீவன்ஸ்] ஆனால் அது சிறப்பாக இருக்கப் போகிறது, ஏனெனில்
நீ வெளியிடுவது பற்றி நீ உற்சாகமாக இருக்கிறாய்…
-[கோமெஸ்] ம்ம். -…அது அதன்படியே நடக்கும்.
நான் வேலை பற்றி இனி பேச விரும்பவில்லை.
-[ஸ்டீவன்ஸ்] சரி. -ஒரு படம் பார்ப்போம்.
எனக்கு ஓய்வு தேவை.
[தோழி] அனைத்திலிருந்துமா?
ம்ம் ம்ம், இல்லை. எனக்கு நிறைய வேலை உள்ளது.
ஹன்டர், நீ நடந்து முதலில் உள்ளே சென்று…
[ஜேனிக்] நீங்கள் காலண்டரில் கவனம் செலுத்தவில்லை என தெரியும், ஆனால் நீங்கள் ஆப்பிரிக்கா செல்கிறீர்கள்.
ஆம், ஏனெனில் நான் முதலில் கென்யா செல்கிறேன்,
பிறகு ப்ரோமோவுக்காக லண்டனுக்கும் பாரிஸுக்கும் செல்கிறேன்.
சரி. அடுத்த மாதத்திற்கு அனைத்தையும் செய்ய முயல்வது பற்றி
-எதுவும் பிரச்சினை இல்லையே? -ம்ம் ஹ்ம்ம். இல்லை.
கவலைப்படவில்லை.
[ஜேனிக்] எனில் அது வெறும் வீடியோ, கேம்பெயின் மற்றும் பாடல்தான்.
ம்ம் ஹ்ம்ம்.
-[ஏர்போர்ட் அதிகாரி] கம்ப்யூட்டர் உள்ளதா… -இல்லை. எங்கள் ஷூக்களைக் கழட்ட வேண்டுமா?
-[ஏர்போர்ட் அதிகாரி] ஆம். -சரி.
போகலாம்! ஊ! ஊ-ஹூ!
மஸாய் மரா, கென்யா
-ஊ! -நன்றி.
வரவேற்கிறோம்.
-இது ஆசீர்வாதம் என்றும் சொல்வோம். -என்ன?
மழை பெய்யும்போது, அதை ஆசீர்வாதம் என்போம்.
-இது ஆசீர்வாதமா? -ஆம்.
இங்கே மழை பெய்யும்போது, அது ஆசீர்வாதமாகக் கருதப்படும்.
-[ஸ்டீவன்ஸ்] ஓ, எனக்குப் பிடித்துள்ளது. -ஊ! ஓ! [சிரிக்கிறார்]
[வழிகாட்டி] இந்தாருங்கள். இதை இப்போது போட்டுக் கொள்ளலாம். கேமரா இருக்கலாமா?
-பரவாயில்லை. -[வழிகாட்டி] பரவாயில்லையா?
-அனைவருக்கும் வணக்கம். -[மாணவி] வணக்கம்.
-ஹாய், உன் பெயர் என்ன? -அனீஸியா.
-அனீஸியாவா? நான் செலீனா, சந்தித்ததில் மகிழ்ச்சி. -ஆம்.
ஹலோ. என் பெயர் செலீனா. ம், நான் வீ உடன் இங்கே வந்துள்ளேன்,
படிப்புக்கான உங்களது ஆசையை நான் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.
இங்கிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
[அனீஸியா] நீங்கள் எந்த வகுப்பு வரை படித்தீர்கள்? 12வது வகுப்பை முடித்தீர்களா?
-ம், நான் எட்டாம் வகுப்பு முடித்துள்ளேன்… -ம்ம் ஹ்ம்ம்.
…பிறகு ஒன்பது, பத்து, 11, 12வது வகுப்பிற்கு, செட்டிலேயே படித்தேன்.
ஒரு ஐந்து மணிநேரம் படிப்பேன், பிறகு வேலை செய்வேன், அதனால்…
ம்ம் ஹ்ம்ம். அருமை.
அது… அது சுவாரஸ்யமாக இருந்தது, தெரியுமா?
கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் படிப்பது. அது உண்மை இல்லை…
[மாணவி] ஆஹா.
…ஆனால்… அது எனக்கு சிறப்பாக இருந்தது. அது வேலை செய்தது, புரிகிறதா?
[அனீஸியா] போன ஆண்டு இறுதியில், நாங்கள் ஒரு டேலன்ட் குழு வைத்திருந்தோம்,
உங்களது பாடலைப் பாடுவோம். அது…
♪ உன்னிடம் குறையுள்ளது என யார் கூறுவது ♪
-[சிரிக்கிறார்] -[கோமெஸ்] ஓ, அது என் பாடல்!
-அது எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. -[மாணவி] ♪ யார் கூறுவது, யார் கூறுவது ♪
[அனைவரும்] ♪ உன்னிடம் குறையுள்ளது என யார் கூறுவது? உனக்கு மதிப்பில்லை என யார் கூறுவது? ♪
♪ உனக்கு மட்டும்தான் வலிக்கிறது என யார் கூறுவது? ♪
[கோமெஸ்] நான் பள்ளியில் மிகவும் வெட்கப்படுவேன்,
அதனால் வழக்கமாக நான் எப்போதும் இரு நண்பர்களுடன் தான் இருப்பேன்.
மேலும், என் கசின் தான் சீயர்லீடிங் அணியின் கேப்டன், அதனால்
என் கசினால் என்னை யாரும் அச்சுறுத்த மாட்டார்கள்.
என் கசின் தான் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். ம்…
[ஸ்டீவன்ஸ்] ஹ்ம்ம், சரி.
நான் எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தேன், என் பெற்றோருக்கு எட்டு குழந்தைகள்.
என் அம்மா என்னை திருமணம் செய்துகொடுக்க விரும்புவதாகக் கூறினார், ஆனால்,
ஒரு கட்டத்தில், அவர்கள் அதைக் கூறினார்கள்,
”நீ படிக்க உதவித் தொகையுடன் பள்ளி இருப்பதால்,
எங்களின் தேவை இருக்காது.”
அவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை.
அதனால் எனக்கு திருமணம் செய்ய மாட்டார்கள் என்று கூறினார்கள்.
-[ஸ்டீவன்ஸ்] அது சுவாரஸ்யமாக உள்ளது. -நீ அன்பை நம்புகிறாயா?
[மாணவி சிரிக்கிறார்] அன்பா?
நீ அன்பை நம்புகிறாயா?
[மாணவிகள் சிரிக்கின்றனர்]
-ஏனெனில் நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள். -[மாணவிகள்] ஆம்.
[சிரிக்கிறார்] அன்பு என்பது ஒரு பரிசு.
-[மாணவி] ஆம். -[ஸ்டீவன்ஸ்] ஆம்.
அது நீங்கள் எதிர்பார்க்கும் ஒன்றா அல்லது…
-நீங்கள் செய்வதில் கவனம் செலுத்தினால்… -[அனீஸியா] எனக்கு…
-…அது வரும். சரியா? -[அனீஸியா] ஆம்.
அல்லது பாய்ஃபிரண்ட் இருப்பது போல.
எனக்கு, ம், என் ஹை ஸ்கூலை முடித்தபிறகு எனக்குக் கிடைக்கும்.
[நாக்கைச் சொடுக்குகிறார்] எனக்கு அது பிடித்துள்ளது.
ஏனெனில்… என் கவனம் சிதற விரும்பவில்லை.
முதலில் இங்கே கவனம் செலுத்த விரும்புகிறேன்.
அடித்தளத்தை அமைக்காமல், நாம்
கூரையைக் கட்ட முடியாது.
-அடித்தளத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். -[கூச்சலிடுகின்றனர்]
என்னிடம் அடித்தளம் இல்லை,
அதனால் நான் ஃபார்ம் நான்கை முடிக்கும் வரை…
அதற்குப் பிறகு அதைப் பற்றி நான் யோசிக்கலாம்.
[ஸ்டீவன்ஸ் சிரிக்கிறார்] எனக்கு அது பிடித்துள்ளது.
அருமையாகக் கூறினாய்.
[ஸ்வாஹிலியில் பேசுகின்றனர்]
[ஸ்டீவன்ஸ்] ம்ம்.
[ஸ்வாஹிலியில் பேசுகின்றனர்]
-என் பெயரா? செலீனா. -செலீனாவா?
-ஆம். -செலீனா.
-உங்கள் பெயர் என்ன? -ம், டையானா.
-டையானாவா? -ம்ம்.
-அழகாக உள்ளது. -[சிரிக்கிறார்] ம்ம்.
[ஸ்டீவன்ஸ்] ரகெல்.
-ஓ ஆம். அவர் “எனக்கு மகன் இருக்கிறான்” என்றார். -ஓ! ஆம்! உங்கள் வளர்ந்த மகன். சரி.
அவருக்கு என்னைப் பிடிக்குமா?
அவருக்கு என்ன வயது?
-[பீடர்] 20, 21 வயதாகிறது. -[ஸ்டீவன்ஸ்] சரி!
-[கோமெஸ்] அது சரியாக இருக்கும். -அது சிறப்பாக இருக்கலாம்,
எங்கள் இருவருக்கும் 27 வயதாகிறது. செலீனாவுக்கு இளம் நபர்களைப் பிடிக்கும்.
அடக் கடவுளே. என்ன? ரகெல்!
முன்பு பிடித்தது.
என் லூப்பஸ் பெரிதாவது எனக்கு கவலையாக உள்ளது.
-இதைத் திறக்கிறாயா? -[ஸ்டீவன்ஸ்] ம்ம் ஹ்ம்ம்.
என் கைகள் இன்னும் சரியாகவில்லை.
[ஸ்டீவன்ஸ்] நடுங்குகின்றனவா?
இல்லை, வலிக்கின்றன.
-இப்படிச் செய்யும்போது, வலிக்கிறது. -[ஸ்டீவன்ஸ்] ஏன்?
தெரியவில்லை. நான் டாக்டரிடம் சென்றபோது வீக்கம் எதுவும் இல்லை என்றார்.
அதைக் கண்டுபிடிக்க ஒரே வழி நான் ஒரு…
-நன்றி. -ம்ம் ஹ்ம்ம்.
-நான் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டுமா? எம்ஆர்ஐ. -ஓ, ஆம்.
-திரும்பியதும் நான் எடுக்க வேண்டும். -ம்ம் ஹ்ம்ம்.
வீ கல்லூரி
என் பெயர் பெட்டி செப், நான் இங்கே நர்ஸிங் படிக்கிறேன்.
நீங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும்போது அதன் சராசரி…
[செப்] நர்ஸாக இருப்பது, நீங்கள் மக்கள் மோசமாக இருக்கும்போது
அவர்களுடன் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் என்னால் செய்ய முடிந்த சிறந்த விஷயம் அதுதான் என உணர்ந்தேன்.
என் அப்பாதான் என் ரோல் மாடல்.
அவர் எனக்கு…
இந்த வாழ்க்கையில் நாம் மக்களிடம் அனுதாபத்தைக் காட்ட வேண்டும், நாம்
பெறுவதை விட அதிகமாக பிறருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்துள்ளார்.
ஆம்.
நான் கடவுளை நம்புகிறேன்.
என்னைப் பற்றி பிறர் என்ன நினைத்தாலும், கடவுள் என் வாழ்க்கையில் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ
அதைத்தான் என் வாழ்வில் சாதிப்பேன் என
எப்போதும் எனக்குள் கூறிக்கொள்வேன். ஆம்.
-அது அற்புதமான விஷயம். -ஆம்.
-நானும் கடவுளை நம்புகிறேன். -ஆஹா.
[செப்] நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது,
என் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
நான் படிப்பதற்கு என் அம்மாவால் பணம் திரட்ட முடியவில்லை.
அதனால் ஆறு ஆண்டுகள் நான் வீட்டில் இருந்தேன்.
விறகு பொறுக்கிக் கொண்டு, நீர் எடுத்து வந்து, வீட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.
அந்த ஆறு ஆண்டுகளில், நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்,
ஏனெனில் நான் என் அம்மாவுக்கும் பிறருக்கும் பாரமாக இருப்பதாக உணர்ந்தேன்.
அதனால் ஊக்கமின்றியும் நம்பிக்கையின்றியும் இருந்தேன்.
அதனால் நான் ஆற்றுக்குச் சென்றேன், பிறகு…
”நான் இந்த ஆற்றில் மூழ்கிப் போகிறேன்.
இங்கேயே இறந்துவிடுகிறேன், அதனால்…
என் அம்மா கஷ்டப்படுவதை இனி பார்க்க மாட்டேன்,
என் சகோதர சகோதரிகள் கஷ்டப்படுவதைப் பார்க்க மாட்டேன்…
இங்கேயே இறந்துவிடுகிறேன்” என நினைத்தேன்.
பிறகு அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, “இப்போது நான் இறந்தால்…
என் குடும்பத்தின் மூத்த மகளாகிய நான் என் குடும்பத்திற்கு எந்த மாதிரியான…
உதாரணமாக இருப்பேன்?” என நினைத்தேன்.
-அருமை. -நான் எழுந்தேன்,
தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு…
எனக்கு வீ கல்லூரியில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
-அருமை. -[செப்] அது ஒரு அற்புதம்.
ஆனால் இப்போது என்னைப் பாருங்கள். என் சமூகத்தில் நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன்.
[இருவரும்] உண்மைதான்.
சிலர் என்னை அழைத்து, பெண்களிடம் பேசச் சொல்வார்கள்…
நீங்கள் செய்யும் தினசரி வேலைகளைக் கூட தொடர்ந்து செய்தால் அதிசயம் உங்களைத் தேடி வரும்
என்று அவர்களிடம் நான் வழக்கமாக சொல்வதுண்டு.
-ஆம். -[செப்] ஆம்.
நம் வாழ்வை முடித்துக் கொள்வது பற்றி நினைப்பதற்கே அதிக துணிச்சல் வேண்டும்.
மேலும் அதை நாம் செய்யக்கூடாது எனப் புரிந்துகொள்வதற்கும்.
-ஆம். -[கோமெஸ்] நாமாகவே.
அதனுடன் என்னைத் தொடர்புப்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் அதைக் கூறும்போது,
உங்களைக் காயப்படுத்திக்கொள்ள நீங்கள் ஏதோ செய்யப் போகும்
-அந்த உணர்வு எனக்குத் தெரியும். -[செப்] ஆம்.
உங்களைத் தெரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. [சிரிக்கிறார்]
உங்களைத் தெரிந்துகொண்டதிலும் எனக்குப் பெருமையாக உள்ளது. [சிரிக்கிறார்]
[சிரிக்கிறார், மூக்கை உறிகிறார்]
[இடி இடிக்கிறது]
[கத்துகின்றனர்]
ஓ. ரகெல்! வா.
[கத்துகிறார்]
[கோமெஸ்] வாழ்க்கையில், என் இலக்குகளில் ஒன்று…
ஏழாண்டுகளாக இது என் மனதில் உள்ளது, ம்,
-தொடக்கப் பள்ளியிலிருந்து… -ஆம். ஓ, அருமை.
…உயர்நிலைப் பள்ளி வரை தெரபி போன்ற வகுப்பை அவசியமாக்கும்
சட்டத்தைக் கொண்டு வருவது.
நாம் குழந்தையாக கிண்டர்கார்டனில் இருக்கும்போது,
நாம் எப்படி உணர்கிறோம் என அவர்கள் நம்மிடம் கேட்பார்கள்.
அங்கே சிரித்த முகம் அல்லது சோகமான முகம் இருக்கும், அங்கே உணர்வுகளைக் கற்றுத்தருகிறார்கள்,
அது அற்புதமான விஷயம், ஆனால் ஏன் அதைத் தொடர்வதில்லை?
-உணர்வுகள் அதன் பிறகு மிகவும் சிக்கலாகின்றன… -ஆம்.
-…மேலும்… புரிந்துகொள்வது சிரமமாகிறது. -ம்ம் ஹ்ம்ம்.
-[ஹோஸ்ட்] நான் வித்தியாசமான கேள்வி கேட்கலாமா? -[கோமெஸ்] கேளுங்கள்.
கிரேக் வீ அறக்கட்டளையின் நிறுவனர்
-அதைச் செய்ய எது உங்களைத் தடுக்கிறது? -அதை உடனடியாகச் செய்யலாம்.
ம், என்னால் அதைச் செய்ய முடியாது.
[அறக்கட்டளை உறுப்பினர்] ம்ம்.
நான் அந்தளவிற்கு திறமையானவள் இல்லை.
[அறக்கட்டை உறுப்பினர்] ம்ம்.
தெரியவில்லை. வளரும்போது அதைப் பற்றி நான் நிறைய உணர்ந்துள்ளேன்.
-[அறக்கட்டளை உறுப்பினர்] ம்ம் ஹ்ம்ம். ஆம். -[கோமெஸ்] ம்ம்.
ஆனால் உங்களை அதை உணரவைத்த அதே விஷயத்தால்தான்
நீங்கள் பிறரைப் புரிந்துகொள்கிறீர்கள்.
அதனால்தான் நீங்கள் அதைச் செய்வதற்கான சரியான நபர்.
[கோமெஸ்] உண்மை என்னவெனில், நான் அந்தளவுக்குத் திறமையானவளாக உணர்ந்ததில்லை.
நான் மேடையில், கூட்டத்திற்கு முன்பு நிற்கும்போது கூட,
என்னைப் பிடிக்காத ஒரு நபரையே நான் கண்டறிந்து, அவர்களை நம்புவேன்.
நான் என்னை நம்ப விரும்புகிறேன்.
கென்யாவில் நான் சந்தித்த நபர்கள் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
நான் இங்கே இவர்களுடன் இருக்கத் தகுதியானவளாக இருக்க விரும்புகிறேன்.
[கௌபெல் ஒலிக்கிறது]
[ஸ்டீவன்ஸ்] நாம் பிறகு நிறைய பேசலாம்.
-எதைப் பற்றி? -இதைப் பற்றி.
-எதைப் பற்றி? ஓ, தெரியும். [மூக்கை உறிகிறார்] -நீ சோகமாக இருக்கிறாய் எனத் தெரியும்.
நாம் காலாண்டுக்கு ஒருமுறை இங்கே வர வேண்டும்.
நாம் இதை ஒவ்வொரு காலாண்டுக்கும் திட்டமிட வேண்டும்.
நீ ஏன் வீட்டுக்குச் செல்வதை வெறுக்கிறாய் மற்றும் உன் ஃபோனை ஆன் செய்வதில்லை என்பது
பற்றியும் நிறைய பேச வேண்டும். அது…
நீ அப்படி உணரக் கூடாது.
நான் சொல்வது புரிகிறதா? உன் ஃபோனை ஆன் செய்வதற்குக் கவலைப்படாமல் இருக்க,
வீட்டுக்குச் செல்ல சோகமாக இல்லாமல் இருக்க, உன் வேலையை வெறுக்காமல் இருக்க
உன் வாழ்க்கையில் நீ என்ன செய்ய முடியும் என்பது போல.
-நான் சொல்வது புரிகிறதா? -ம்ம்.
அது, ஏனெனில்… அதைக் கடக்க உன்னால் சில விஷயங்களை உன்
வாழ்க்கையில் செய்ய முடியும்.
அந்த நிலையிலேயே தொடர்ந்து நீ உன் வாழ்வை வாழ வேண்டியதில்லை.
ஒரு விதத்தில், அது நிஜ வாழ்க்கையில் இருந்து தப்பிப்பது. சொல்வது புரிகிறதா? அது…
அல்லது இது நிஜ வாழ்க்கையா?
இது நிஜ வாழ்கையில்லை. இது அவர்களது நிஜ வாழ்க்கை. இது…
இது ஆண்டில் சில முறை நிஜ வாழ்க்கையாக இருக்கலாம்.
நீங்கள் வந்து ஒரு வாரத்திற்கு தன்னார்வத் தொண்டாற்றலாம்,
ஆனால் இது நிஜ வாழ்க்கை இல்லை.
♪ நான் நிரந்தரமாக இங்கே இருக்க விரும்புகிறேன் ♪
♪ என் கண்களை மூட விரும்பவில்லை ♪
தி கென்யன் பாய்ஸ் கொய்ர்
♪ நான் நிரந்தரமாக இங்கே இருக்க விரும்புகிறேன் ♪
♪ என் கண்களை மூட விரும்பவில்லை ♪
♪ நான் நிரந்தரமாக இங்கே இருக்க விரும்புகிறேன் ♪
♪ என் கண்களை மூட விரும்பவில்லை ♪
♪ நான் நிரந்தரமாக இங்கே இருக்க விரும்புகிறேன் ♪
♪ என் கண்களை மூட விரும்பவில்லை ♪
[ஆரவாரம்]
லண்டன்
[கூச்சலிடுகின்றனர்]
[ஹாரன் சத்தம்]
-[கோமெஸ்] யார் அது? -[குழு உறுப்பினர்] பாப்பராஸிகள் மறைக்கின்றனர்.
[கெஷிஷியான்] அடக் கடவுளே. பாப்பராஸி கார்கள் வருகின்றன.
[குழு உறுப்பினர்] ஆம், அவர்கள் ஒன்றுகூடுகின்றனர்.
இங்கே மிகவும் சத்தமாக உள்ளது, கிறிஸ்.
[கிறிஸ்] எனக்குத் தெரியும்.
இங்கே ஒரு கலாச்சார அதிர்ச்சியை உணர்கிறேன்.
[கிறிஸ்] தெரியும்.
-[மிங்கஸ்] செலீனா? குட் மார்னிங். -ம்ம் ஹ்ம்ம்.
[கோமெஸ்] ஹேய்.
காலை 7:00 மணி ஆகிறது. கிளாம் இன்னும் அரை மணிநேரத்தில் தொடங்கிவிடும்.
[ஸ்டீவன்ஸ்] செல்லி?
ஓ இல்லை, எனக்கு ஒரு கெட்ட கனவு வந்தது.
எனக்கு கென்யாவில் ஒரு கெட்ட கனவு கூட வரவில்லை, தெரியுமா?
-[தோழி] தெரியும், பிறகு… -அவளுக்கு கென்யாவில் கெட்ட கனவுகள் வரவில்லை.
[கோமெஸ்] நான் என்ன கூறினேன்?
நான் கொஞ்சம்தான் கேட்டேன், ஏனெனில் நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தீர்கள்,
ஆனால், அந்த ஒரு விஷயம், “நான் அனைவருக்கும் காஃபி எடுத்து வந்துள்ளேன்!”
-நான், “ஓ, அருமை!” என்றேன். -அவள் அப்படிக் கூறினாளா?
[தோழி சிரிக்கிறார்] பிறகு அவர்…
[ஸ்டீவன்ஸ்] இன்று செய்தவை போலச் செய்வது,
அதுபோல பயணங்கள் செய்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான
-வாய்ப்பை அது கொடுக்கும், தெரியுமா? -ம்ம்.
இதுபோல விஷயங்கள் கடினம் என்றாலும், அது…
தாய் உணவு ஆர்டர் செய்யமுடியுமா? அந்த தாய் உணவு?
[ஸ்டீவன்ஸ்] இப்போது தாய் உணவு வேண்டுமா? காலை 7:00 மணிக்கா?
-ஆம். -ஆர்டர் செய்வோம்.
நம்முடன் ஸ்டூடியோவில், ஒரே ராணியான…
-ஆ. -…செலீனா கோமெஸ் இருக்கிறார்!
[ஆரவாரம்]
-[ஹோஸ்ட்] உங்கள் ஆல்பம் வரவிருக்கிறது. -ஆம்.
நீங்கள் இசையிலிருந்து கொஞ்சம் ஓய்வில் இருந்தீர்கள்.
உங்கள் ஓய்வில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
தனிப்பட்டதற்கும் கடினம் என்பதற்கும் இடையே சில விஷயங்கள் நடந்தன,
ம், பிறகு இறுதி வரை, அது தேவையாக இருந்தது.
அனைவருக்கும், வணக்கம். நான் செலீனா கோமெஸ்,
நான் இணையத்திலிருந்து கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்.
”செலீனா கோமெஸ் ஃபோர்க்கில் ஓரியோ சாப்பிடுகிறார்.”
ம், இவை அற்புதமாக உள்ளன. நான் உலகத்திற்காக சிறப்பான விஷயங்களைச் செய்கிறேன்.
இன்று இது எத்தனையாவது பேட்டி?
நான்காவது.
-[கிரீன்] நான்கா? -[மாஸ்கெல்] அதற்குள் நான்கா?
-[கூச்சலிடுகின்றனர்] -[பார்ர்] செலீனா, உங்களது சிங்கிள்
என்னை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நான் உங்களைக் கட்டிப்பிடித்து,
போரவையில் சுற்றி, ஆண்களைப் பற்றி எப்போதும் பேச விரும்புகிறேன்.
அந்தப் பாடலின் நோக்கமே நான் சுற்றி உட்கார்ந்து கொண்டு
ஆண்களைப் பற்றி பேச வேண்டியதில்லை என்பதுதான்.
[பாப்பராஸோ] செலீனா, உங்கள் ரசிகர்களுக்காக!
ஹேய், நான் செலீனா கோமெஸ், நான் ஈமோஜி கேம் விளையாடுகிறேன்.
ஆனால் மோசமான உணவுகளின் காம்பினேஷனைச் சாப்பிட்டுள்ளீர்களா?
பாப்கார்னும் பிக்கிள் ஜூஸும்.
[பேட்டி எடுப்பவர்] உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன?
எனக்குப் பிடித்த நிறம் சிவப்பு.
விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸ்
-[கோமெஸ் சிரிக்கிறார்] -நிறுத்துங்கள்.
இது ஒரு வார்த்தைக்கு ஒரு டீஜே.
”மார்ஷ்மெல்லோ.”
-மென்மை. -சரி. அவ்வளவுதான். நன்றி.
-[கேமராமேன்] நன்றி. -நன்றி.
ஓ, சரி, மன்னிக்கவும்.
[பெருமூச்சு]
[குழு உறுப்பினர்] அவை மிகவும் விசித்திரமான கேள்விகள்.
[குழு உறுப்பினர்கள் சிரிக்கின்றனர்]
அது நேரத்தை வீணடிப்பதாக இருந்தது.
நான் இப்போது என்ன செய்கிறேன்?
[தோழி] இப்போது, நாம் எழுந்ததும், கிளாம் பத்து நிமிடங்களில் வருகின்றனர்.
மன்னிக்கவும், நான் தூங்கிவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?
-[விழுங்குகிறார், சிரிக்கிறார்] -[பரிகசிக்கிறார்]
நீ பயணக் களைப்பில் இருக்கும்போது உணரும் உணர்வுகள்…
அவற்றை மற்ற நேரத்தில் உணர மாட்டாய்.
-[ஹேர் ஸ்டைலிஸ்ட்] அது என்ன? -[மரினோ] அனைத்துப் பொருட்களின் சேர்க்கை.
-[ஹேர் ஸ்டைலிஸ்ட்] அது களைப்பாக இல்லை. -[மரினோ] தெரியும்.
[ஹேர் ஸ்டைலிஸ்ட்] நீங்கள் வேறு உலகத்தில் இருப்பதாக உணர்வீர்கள்.
-[மரினோ] விண்வெளியில் இருப்பது போல. -[ஹேர் ஸ்டைலிஸ்ட்] ஆம்.
[நகத்திற்கான டெக்னீஷியன்] சரி, உள்ளே விடுங்கள்.
[பீப் சத்தம்]
[சைரன்கள் அலறுகின்றன]
அது எனக்கானது.
[குழு உறுப்பினர்கள் சிரிக்கின்றனர்]
[ஸ்டீவன்ஸ்] நாம் திரும்பி வந்ததும் நாம் மரிஸ்ஸாவின் பிறந்தநாள் டின்னருக்குச் செல்ல வேண்டும், தெரியுமா?
[கோமெஸ்] நாம் திரும்பி வரும் இரவிலா? இல்லை, அதற்கு நான் செய்வதையே செய்வேன்.
நான் அதைச் செய்ய மாட்டேன். நான் அடுத்த நாள் மியூசிக் வீடியோவை ஷூட் செய்ய வேண்டும்.
அருமை.
-அது நிறைய வேலை. -அது சரியாகிவிடும்.
இல்லை, அது நன்றாக உள்ளது, ஆனால் சில நாட்களுக்கு உடல் களைப்பாக இருக்கும்.
ஆம், உண்மைதான். நீ வர விரும்புவாய் என நினைத்தேன்,
-ஆனால் அது… ம்ம். -நான் வருவேன், ஆனால்
-அதற்கு என்னிடம் நேரம் இல்லை. -சரி.
என் வேலையைப் பற்றி குறை கூறுவதாக நினைக்கிறாயா?
ஆம். அப்படித்தான் கூறினாய். [தொண்டையைச் சரிசெய்கிறார்]
அப்படியில்லை. ரகெல், நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறினேன்.
-அது மோசமானது இல்லை. கண்டிப்பாக… -[தொண்டையைச் சரிசெய்கிறார்] அது மோசமில்லை.
நீ கூறிய விதம் அப்படி இருந்தது. நீ கூறிய விஷயம் இல்லை.
நான் வேலையைப் பற்றி குறை கூறவில்லை.
நான் இன்னும் கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று குறை கூறினேன்.
[தொண்டையைச் சரிசெய்கிறார்]
[கோமெஸ் பெருமூச்சு]
-நான் நன்றியுணர்ச்சி இல்லாமல் இருப்பதாக… -இல்லை, அப்படி நினைக்கவில்லை.
கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருப்பதாகத் தெரிகிறது,
அதனால் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள முயல்கிறேன்.
ஆனால் நாம் ஆப்பிரிக்காவில் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்…
தெரியும்.
நான் எழுந்திருக்கிறேன்.
நான் லண்டனை எவ்வளவு நேசிக்கிறேன் என அனைவரிடமும் கூறுவதை நீ கேட்டுள்ளாய்.
என்னிடம் வேறென்ன எதிர்பார்க்கிறாய்?
ஒன்றுமில்லை.
[தொண்டையைச் சரிசெய்கிறார்]
”நீ நன்றாக இருக்கிறாயா?” என்றுதான் கேட்டேன். ஏனெனில் நீ மகிழ்ச்சியாகத் தெரியவில்லை.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நல்லது. நீ மகிழ்ச்சியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு அப்படித் தோன்றவில்லை என்பதால் உன்னிடம் கேட்டேன்.
-நான் களைப்பாக உள்ளேன். -[இருமுகிறார்]
ம்ம் ம்ம்.
[மெல்லுகிறார், இருமுகிறார்]
[ஃபிரஞ்சு ரசிகர்கள் கூச்சலிடுகின்றனர்]
ஊ.
-ஹேய். -[குழுவினர் பேசுகின்றனர்]
[என்ஆர்ஜே பேட்டி எடுப்பவர்] உங்கள் புதிய ஆல்பம் பற்றி, உங்கள் ரசிகர்கள் இதைப் பற்றி
என்ன நினைவுகூர விரும்புகிறீர்கள்?
என் கதை முக்கியமற்றதாக மாறுவதற்கு முன்
இதுதான் அதைக் கூற சரியான நேரம் எனத் தோன்றியது.
”லூஸ் யூ டு லவ் மீ” பாடலில் நான் கூற விரும்பிய கருத்து,
அது மற்றவர்களுக்கான பாடல் என்பதுதான்.
பிறர் யாரும் தனியாக இல்லை என்றும் அது மிகவும் குழப்பமான உணர்வு என்றும்
அதை விடுவதுதான் நீங்கள் செய்ய விரும்பும் விஷயம் என்றும்
அவர்களிடம் கூறுவதற்கானது.
நீங்கள் ஒரு பாடகர், நடிகர், நீங்கள் தயாரித்துள்ளீர்கள், ஃபேஷனில் உள்ளீர்கள்.
ம், வேறு எதையாவது நீங்கள் முயற்சிக்க விரும்புகிறீர்களா?
-எதிர்காலத்தில்? -ம்,
ம், நான் இவற்றையே கொஞ்ச நாட்களுக்கு செய்யலாம் என்றிருக்கிறேன்.
ஆனால் அதில் எல்லாம் என் வேகம் குறையும்போது,
எனது பெரும்பாலான வாழ்க்கையை மானுடவியலுக்கு அர்ப்பணிப்பேன்.
-சரி. அது போதும். -சரி.
-[பரிகசிக்கிறார்] அருமை. நன்றி. -[சிரிக்கிறார்]
-மிக்க நன்றி. -[சிரிக்கிறார்] மிக்க நன்றி.
நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டது போல உணர்ந்தேன்.
சரி, முடிக்கலாமா?
-[என்ஆர்ஜே பணியாளர்] சரி. -[குழு உறுப்பினர்] எனக்கு கோபம் வருகிறது.
நான் உட்காரலாமா?
உட்காரு, கண்ணே.
-உள்ளே வா. -[குழு உறுப்பினர்] முடிந்தது.
[ஸ்டைலிஸ்ட்] உங்களது உடையை மாற்றப் போகிறோம்.
-நான் செய்ததிலேயே முட்டாள்தனமான விஷயம். -என்ன நடந்தது?
முடிந்தது. இனி என்னால் அதைச் செய்ய முடியாது. அது முட்டாள்தனமானது.
அது என்னை எவ்வளவு மதிப்பற்றவளாக உணரச் செய்தது தெரியுமா? நான்…
-[முனகுகிறார்] -ஆம்.
அவர் என்னிடம் நல்ல கேள்விகளைக் கேட்கிறார்,
ஆனால் நான் சொல்வதை அவர் கவனிக்கவேயில்லை.
நான் அதை இனி செய்ய விரும்பவில்லை.
நான் ஒரு ப்ராடக்ட் போல உணர்கிறேன்.
[பெருமூச்சு] அடக் கடவுளே.
-அது என்னைக் கோபப்படுத்தியது. -[குழு உறுப்பினர்] ஆம்.
அது எனக்கு டிஸ்னி போல உணரச் செய்தது.
[குழு உறுப்பினர்] அது ஒரு ட்ரிக்கர்.
நான் அப்படி இருக்கக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளைச் செலவழித்துள்ளேன்.
நான் கையில் மந்திரக்கோலை உடைய
சூனியக்காரி போல தெரிகிறேன்.
-என்னவோ. பரவாயில்லை. -[கெஷிஷியான்] நீ முடித்துவிட்டாய்.
-நீ அதை மீண்டும் செய்ய வேண்டாம். -ஆம்.
[ரசிகர்கள் கூச்சலிடுகின்றனர்]
ஹாய்.
[ஆரவாரம்]
[ரசிகர்கள் கத்துகின்றனர்] செலீனா!
-ஹாய், செலீனா. எப்படி இருக்கிறீர்கள்? -செலீனா!
[கூச்சலிடுகின்றனர்]
[ரசிகர்கள் கத்துகின்றனர்] செலீனா!
ஓ, நான் அங்கே செல்கிறேன்.
[ரசிகர் 1] நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள். நன்றி.
-[அழுகிறார்] -எப்படி இருக்கிறாய்? ஒன்றுமில்லை.
-[அழுகிறார்] -பரவாயில்லை. நீ நன்றாக இருக்கிறாய்.
-எல்லாம்… ஆனந்தக் கண்ணீர்தானே? -ஆம், ஆம்.
சரி.
-நாம் ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா? -ஆம். எடுத்துக்கொள்ளலாம்.
[ரசிகர் 2] செலீனா, ஃபோட்டோ, விரைவாக!
[ஆரவாரம் தொடர்கிறது]
-[பாடிகார்ட்] நன்றாக உள்ளீர்களா? -ஆம்.
[பெருமூச்சு]
[உறுமுகிறார்]
[ஸ்டீவன்ஸ்] உனது காலை மருந்துகளை எடுத்துக்கொள்கிறாயா?
ம்ம்.
[ஸ்டீவன்ஸ்] எனக்கு பதில் தெரியும், ஆனால்… நீ எடுத்துக்கொள்ள வேண்டும்.
-[பாப்பராஸி பேசுகின்றனர்] -[பாப்பராஸோ] மார்னிங், செலீனா!
[கேமரா ஷட்டர்களின் சத்தம்]
[ஆழமாக மூச்சுவிடுகிறார்]
[தெளிவின்றி வாயசைக்கிறார்]
இதை உள்ளேயோ மேலேயும் கீழேயுமோ இணைத்துக்கொள்ளுங்கள்.
[கேபிட்டல் எஃப்எம் பணியாளர்] நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனத் தெரியுமா?
-இல்லை. அதுதான் எனக்கு நல்லது. -[சிரிக்கிறார்]
[சிரிக்கிறார்] நாங்கள் உங்களை அந்த அறையில் தனியாக விட்டுவிடுவோம்.
நீங்கள் கண்ணாடியில்தான் பேசுவீர்கள். இது உங்களுடனான உரையாடல்.
-சரி. -ம், பிறகு அந்த ஸ்பீக்கரிலிருந்து, ம்,
வழிமுறைகளைக் கேட்பீர்கள்.
-சரி. -பிறகு நாம் பார்த்துக்கொள்ளலாம்.
-சரி. -அற்புதம்.
[கேபிட்டல் எஃப்எம் பணியாளர் 2] ஹாய், செலீனா. அந்த முதல் கவரைத் திறக்கிறீர்களா?
”காதலில் இருப்பதை நினைவுப்படுத்தும் பாடல்.”
[நாக்கைச் சொடுக்குகிறார்] அப்படி ஒன்று உள்ளதா எனத் தெரியவில்லை.
[சிரிக்கிறார்]
இரண்டாவது கவரை எடுங்கள்.
[தொண்டையைச் சரிசெய்கிறார்]
”கண்ணாடியைப் பார்க்கும்போது என்ன பார்ப்பீர்கள்?”
இவை ஏன் மிகவும் தனிப்பட்டவையாக உள்ளன?
[நாக்கைச் சொடுக்குகிறார்] நான், ம்…
[பெருமூச்சு] நான்…
ஆம். கண்ணாடியில் என்ன பார்க்கிறேன் என தெரிந்துகொள்ள முயல்கிறேன்.
இவை நல்ல கேள்விகள்.
உங்களது பெரிய கனவு என்ன?
ஏதாவது ஒன்றின் மூலமாக மக்களின் வாழ்வைக் காப்பாற்ற…
முடிவதுதான் எனது…
[பெருமூச்சு] …மிகப் பெரிய கனவு,
அது பாடலாகவோ, இசையாகவோ அல்லது நான் அனுபவித்த சிக்கல்கள் மற்றும்
சோதனைகளையும் துயரங்களையும் பற்றி கூறுவதாகவோ இருக்கலாம்.
என்ன நடக்கிறது என்றோ அவர்கள் என்ன உணர்கின்றனர் என்றோ தெரியாமல்
இருப்பவர்களின் குரலாக இருக்க முடிவது.
ம், அதைத்தான் நான் நம்புகிறேன். [சிரிக்கிறார்]
அற்புதம். மிக்க நன்றி.
[கோமெஸ்] கவலையால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் கண்ணாடியில்
பார்க்கும்போது அசைய முடியாத பெண் ஒருத்தி இருக்கிறாள்.
அனைவரும் பார்க்கும்போது அவள் சிரிப்பாள், ஆனால் தனிமையில் அழுவாள்.
அவள் தன்னைக் காட்ட பயப்படுவதால் தன்னை மறைக்கிறாள்.
என் உலகம் மிகவும் காலியானது.
என் உலகம் பெரியது மற்றும் குளிரானது.
எனக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வேண்டும்.
என்னால் சுவாசிக்க முடியக்கூடிய சுத்தமான காற்று வேண்டும்.
எது இருந்ததோ அதுவாக இருக்காது.
ஏன் அனைவரும் “ரேர்” என்றிருக்கும் டி-ஷர்ட்டை அணிந்துள்ளனர்?
[ஃபேலன்] ரேர் இப்போது வெளிவந்துள்ளது. ரோலிங் ஸ்டோனுக்கு அது பிடித்துள்ளது.
பில்போர்ட் உங்களை வெற்றிகரமானவர் என்கிறது.
சமீபத்தில் வெளிவரப் போகிற சிறந்த ஆல்பங்களில் ரேர் ஒன்று என
-வெரைட்டி கூறியுள்ளது. -[ரேடியோ ஹோஸ்ட்] இது செலீனாவின்
மூன்றாவது ஸ்டூடியோ ஆல்பம், மேலும் நான்காண்டுகளில் முதல் ஆல்பம்.
அந்தப் பாடகர், “இதுவரை நான் மிகவும் பெருமைப்படும் பாடல் இதுதான்” என்கிறார்.
[கோமெஸ்] கென்யா ஒரு கனவு போல இருந்தது.
நான் ஆண்களைப் பற்றி ஒரு ஆர்வத்தில் கேட்டபோது,
அவர்கள் கூறியது, “இல்லை, இல்லை."
-[சிரிக்கின்றனர்] -“நாங்கள்”…
அவர்கள் சிரித்தனர். அவர்கள், “நாங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய விரும்புகிறோம்,
அது நடக்கும்” என்றனர். நான் அதை ஏற்றுக்கொண்டேன்.
-[சிரிக்கிறார்] -அது அற்புதமான விஷயம்.
அதாவது, இந்தப் பெண்கள் நான் இருந்ததைவிட நம்பிக்கையுடன் இருந்தன, அது அழகாக இருந்தது.
சில நேரம்… நான் மிகவும், ம்…
அதிகமாக யோசிப்பேன்
மேலும் நான் கொடுக்கும் வகையில் என் வாழ்வின் அம்சம் இல்லையோ என யோசிப்பேன்,
அது என்னை… அது என்னை…
அது என்னைச் சிறப்பாக உணர வைக்காது. அது வாங்கிக் கொண்டு மட்டுமே
இருப்பது போலவும் பிறர் எனக்கு இதையும் அதையும்
கொடுக்க வேண்டும் என்பது போலவும் உணரச் செய்யும்,
அது என் குணநலன் இல்லை என்றாலும் கூட.
இப்போது நான் அந்த காலாண்டு விஷயத்தைச் செய்ய விரும்புகிறேன்.
நான் அலீனுடனும் ஸாக்குடனும் டின்னர் சாப்பிடுவேன்,
பிறகு என் இலக்குகளைப் பற்றி
-விவாதிப்போம். -[கெஷிஷியான்] ஆம்.
அந்தப் பயணம் பற்றியும் வீ அமைப்பு பற்றியும் கொஞ்சம் பேசலாமா,
-நீங்கள் ஏன் தொடங்கக்கூடாது? -[கோமெஸ்] ம்ம்.
நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
பள்ளிகளில் கற்பிக்கக்கூடிய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கான
வழியைக் கண்டறிய விரும்புகிறேன்.
உங்கள் உணர்வுகளுடன் இணைந்திருப்பது பற்றியும் அந்த அறிவைப் பெற்றிருப்பது பற்றியும்
நிறைய விஷயங்கள் கூறப்பட வேண்டும்.
அதைப் புரிந்துகொள்ளவில்லை எனில்,
-கிட்டத்தட்ட உங்கள் கதை முடிந்தது. -நீங்கள்…
உங்களிடம் இரக்கமோ அனுதாபமோ இருக்காது.
-ஆம். -உங்களால் பிறருடன் இணைந்திருக்கவே
முடியாது, ஏனெனில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாது.
இது போன்றவற்றைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்.
-இது எனக்கு… -நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்.
மிகவும் முக்கியமான ஒன்று.
[ரேடியோ ஹோஸ்ட்] இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான
மக்களைப் பாதிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் கூறும் ஒரு கொடிய
வைரஸ் பற்றிய விவாதத்திலிருந்து தொடங்குவோம்.
அமெரிக்காவில் இரண்டாவது தொற்று இன்று காலை அறிவிக்கப்பட்டது.
இது கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ்.
[செய்தி வாசிப்பவர்] நாட்டின் பெரிய நகரங்கள்
முற்றிலும் காலியாகத் தென்படுகின்றன.
[செய்தி வாசிப்பவர் 2] ஒரே இரவில், நமது தினசரி வாழ்க்கை
தற்காலிகமாக நின்றுவிட்டன.
அனைத்து அமெரிக்கர்களும் “புதிய இயல்புநிலை” என்பதற்கு மாற முயல்கின்றனர்.
[செய்தி வாசிப்பவர் 3] பெரிய தனியார் நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட்டிலிருந்து
ஆற்றல் துறை மற்றும் கஜானா துறை வரை
எல்லா உட்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
-சட்டம் இயற்றுபவர்கள் இப்போது பதில்களை… -ஹேய் செல்,
உங்கள் ரத்த அழுத்தத்தை எடுக்கப் போகிறோம்.
[ஸ்டீவன்ஸ்] ஹலோ, வின்னி.
[செய்தி வாசிப்பவர்] மாலை வணக்கம், எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.
நாம் வீ அறக்கட்டளையின் முக்கியச் செய்தியிலிருந்து தொடங்குவோம்,
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சம்மந்தப்பட்ட சமீபத்திய நெறிமுறை விசாரணையின்
மையத்தில் உள்ள அமைப்பு.
வீ அறக்கட்டளை தனது கனடா நாட்டு செயல்பாடுகளை மூடியது.
அந்த தாராள அரசாங்கம் அதற்கு ஒரே மூலத்தைக் கொண்ட, பல லட்சம் டாலர்
ஒப்பந்தத்தைப் போட்ட பிறகு அந்த அறக்கட்டளை சிக்கலில் மாட்டியது…
[கோமெஸ்] வீ அறக்கட்டளைக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவர்களுடன் நான் செய்வதற்காகத்
திட்டமிட்டிருந்தவற்றை சாத்தியமில்லாததாக்கியது.
[முனகுகிறார்]
[கீல்பர்கர்] மிக முக்கியமான விஷயம்…
[கோமெஸ்] அது என் இதயத்தை நொறுக்கியது, ஏனெனில் நான் அவர்களது நல்ல நோக்கங்களைப் பார்த்துள்ளேன்,
மேலும் தங்களது வாழ்வுகள் மாற்றப்பட்ட பெண்களை கென்யாவில் சந்தித்துள்ளேன்.
ஆனால் இப்போது எல்லாம் சிக்கலாகிவிட்டது.
[கீல்பர்கர்] இந்த அமைப்பை 1995 இல் நாங்கள் தார்ன்ஹில்லில் சிறுவர்களாக
இருந்தபோது, எங்கள் பெற்றோரின் பேஸ்மெண்ட்டுகளில் உருவாக்கினோம்,
-ம், இது எங்கள் 25வது ஆண்டு… -அதைக் கேட்க முடியவில்லை. அது மோசமான விஷயம்.
[கோமெஸ்] நான் வருத்தமடைந்தேன்.
கோபப்பட்டேன்.
கோவிட்-19 பெருந்தொற்று நம் அனைவரையும் நண்பர்கள் மற்றும் குடும்பத்திடமிருந்து பிரித்துவிட்டது.
நான் கென்யாவின் கண்டறிந்த நோக்கம் பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
அது இன்னும் மோசமாகாது என நினைத்தபோது,
மோசமானது.
[அழுகிறார்] எனக்குத் தெரியவில்லை. [விசும்புகிறார்]
என் லூப்பஸ்.
[கேமராமேன்] உங்களுக்கு வலிக்கிறதா?
-[அழுகிறார்] -என்னைக் கட்டிப்பிடி. நான் வருந்துகிறேன்.
-ஒன்றுமில்லை. -[கேமராமேன்] நான் உங்களை நேசிக்கிறேன்.
நானும்தான். [அழுகிறார்]
[கேமராமேன்] இது சரியாகிவிடும்.
அவர்கள் இதைச் சரிசெய்துவிடுவார்கள். நீங்கள் நன்றாகிவிடுவீர்கள்.
[தோழி] உங்களுக்கு லூப்பஸ் இருப்பது தெரிந்தபோது
இப்படித்தான் உணர்ந்தாயா?
[தேம்புகிறார்] ஆம், ஆனால் அப்போது எனக்கு வயது குறைவு.
எனக்குச் சிறுவயது என்பதால் நான் அதை உணரவில்லை. [தேம்புகிறார்]
-அடக் கடவுளே. -இப்போது காலையில் நான் எழுந்தபோது
வலித்தது, [விசும்புகிறார்]
அது வலித்ததால் நான் உடனடியாக அழத் தொடங்கினேன்.
-[தோழி] ஆம். -எல்லாமே வலிக்கிறது. [விசும்புகிறார்]
என் கடந்தகாலம் பற்றி எனக்கு கெட்ட கனவுகள் வருகின்றன. [விசும்புகிறார்]
எனது கடந்தகாலமும் என் தவறுகளும்தான்… [விசும்புகிறார்] … எனக்கு மன அழுத்தத்தைக்…
கொடுக்கின்றன என நினைக்கிறேன்.
என் சிறுவயதிலிருந்து என் வாழ்க்கை முழுவதும் நான் வேலை செய்கிறேன்,
நான் விரும்பும் ஒரே விஷயம் என் குடும்பதான். [விசும்புகிறார்]
நான் அம்மா போல ஆக விரும்புகிறேன்.
நான் இவற்றை விட்டுவிட்டு, மற்றவர்கள் போல இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்க விரும்புகிறேன் என ரகெலிடம் சில நேரம் கூறியுள்ளேன். [விசும்புகிறார்]
அதற்கு அவள், “கடவுள் இந்த வாய்ப்பை உனக்கு கைவிடுவதற்காகக் கொடுக்கவில்லை
என நான் நினைக்கிறேன்” என்றாள். [விசும்புகிறார்]
நான் மிகவும் பிரபலமாக இருக்க விரும்பவில்லை.
நான் அப்படி இருக்க விரும்பவில்லை.
ஆனால் நான் இங்கிருக்கிறேன் எனில் அதை நல்ல விஷயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியும்.
நான் சிக்கிக் கொண்டது போல உணர்கிறேன், முன்னே போக விரும்புகிறேன். [விசும்புகிறார்]
ஹலோ.
[டாக்டர் வாலஸ்] ஹாய், நான் டாக்டர் வாலஸ்.
நான் உங்களது சோதனை முடிவுகள் பற்றி உங்களிடம் கூற விரும்புகிறேன்.
உங்களுக்கு ரூமடாய்ட் காரணி உள்ளது,
அதாவது இது லூப்பஸ் மயோஸைடிஸ் ரூமடாய்ட் ஓவர்லாப்.
உங்களுக்கு இன்னொரு டோஸ் ரிடக்ஸன் கொடுக்கலாம், நீங்கள் இப்போது சமாளிக்கும் விகிதத்தில்,
அது உங்கள் மூட்டு வலியை சுமார்
ஓராண்டுக்கு இல்லாமல் செய்யும்.
சரி.
-[டாக்டர் வாலஸ்] சரி, பை. -பை, டாக்டர் வாலஸ்.
-பை. -[டாக்டர் வாலஸ்] பை.
[விசும்புகிறார்]
[குழு உறுப்பினர்] குறைந்தது அது இவற்றை விளக்குகிறது.
ஆம், எனக்கு பதில்கள் கிடைக்கும்போது கொஞ்சம் நன்றாக உணர்வேன்,
ஆனால் போன முறை ரிடக்ஸன் எடுத்துக்கொண்டது சிரமமாக இருந்தது, ஆனால் நான்…
[குழு உறுப்பினர்] அது என்ன?
ரிடக்ஸன் என்பது ஐவி வழியாகக் கொடுக்கும் சிகிச்சையாகும்,
அதற்கு ஒரு நான்கு, ஐந்து மணிநேரம் ஆகும்.
[திக்குகிறார்] அதற்கு முதலில் நமது உடல் பழக கடினமாக இருக்கும், ஆனால், ம், பரவாயில்லை.
[நர்ஸ்] ஒன்றுமில்லை.
அவர்கள் நான் ரிலாக்ஸாக இருக்க மருந்து கொடுத்தனர், ஏனெனில் என்னால் அப்படியே இருக்க முடியாது.
என் பாட்டி இங்கே வர விரும்பவில்லை, ஏனெனில்…
என்னை இவற்றுடன் இப்போதுதான் அவர் என்னைப் பார்த்தார்.
[மிங்கஸ்] இதை உன் வாயில் போட்டுக்கொள்ளாதே.
[துப்புகிறார்]
[கோமெஸ்] நான் ஏன் இங்கிருக்கிறேன்?
நான் ஏன் உயிருடன் இருக்கிறேன்?
[மிங்கஸ்] அதோ வருகிறாள், பாலரினா தம்பெலினா.
[கோமெஸ்] எதற்காகவோ வருகிறாள்.
[மிங்கஸ்] குழந்தையின் முதல் குளியல். அந்த எலிக்குட்டியைப் பார்ப்போம்.
-[அலறுகிறார்] -[சிரிக்கிறார்]
[மிங்கஸ்] சரி, நீ குளிப்பதற்கான நேரம்.
-வாயை மூடு. [சிரிக்கிறார்] -[சிரிக்கிறார்]
நான் என் நண்பர்களையும் குடும்பத்தையும் நேசிக்கிறேன். நான் சிறப்பான மகள் என நினைக்கிறேன்.
நான் சிறப்பான தோழி என நினைக்கிறேன். அது எனக்கு மிகவும் முக்கியமானது.
-என்ன நடக்கிறது? -[சிரிக்கிறார்]
ஆனால், நான் இப்போதும் என்னிடம் இருப்பதை வைத்து யாருக்காவது
உதவ இருக்கிறேன்.
நான் என்னை வெறுத்திருந்தாலும் என்னை உட்கார்ந்து, உணர அனுமதிக்கிறேன்
என் இதயத்தின் ஒரு பகுதி இன்னும் கென்யாவில் உள்ளது,
ஆனால் நான் அங்கே இருந்ததற்கு குற்ற உணர்ச்சியாக உணர்ந்துள்ளேன்.
எனக்குத் தெரியவில்லை, அதை வெறுக்கிறேன்.
நான் அங்கே சென்று, படம்பிடித்து, அனுபவித்தது போல உணர்கிறேன்.
ஆனால் அது மிகவும் கடினமானது, ஏனெனில் நான் சுயநலமாக உணர்கிறேன்.
ஆம், அது அற்புதமாக இருந்தது. ஆம், நான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறேனா? ஆம்.
ஆனால் நான் போதுமானளவு செய்ததாக உணர்கிறேனா? இல்லை.
கென்யாவில் ஒருவருடன் மனநலம் பற்றிப் பேசுவது,
அது… [திக்குகிறார்] …அழகானது.
எனக்குத் தெரியவில்லை…
நான், “ஓ, நான் அதைச் செய்துவிட்டேன்,
நான் சிறப்பான நபர்” என உணர்ந்தேனா எனத் தெரியவில்லை.
இதுதான் எனக்கான தொடக்கம்.
அனைவருக்கும் வணக்கம். நான் செலீனா கோமெஸ்.
மேலும் உலக மனநல தினத்திற்காக, நான் சர்ஜன் ஜெனரல் டாக்டர். மூர்த்தியை
தனிமை பற்றியும் பிறரது மன நலத்திற்கான உதவிக்குத் தேவையான வளங்களை அவர்கள் அணுக
உதவுவது பற்றியும் என்னுடன் பேசுவதற்காக வரவேற்கிறேன்.
மிகவும் கனிவாக அறிமுகப்படுத்தினீர்கள், செலீனா. நாம் இதைப் பற்றிப் பேசுவது
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ம், கோவிட்-19க்கு முன் நாம் எதிர்கொண்டது ஏற்கனவே தனிமை மற்றும் மன அழுத்தம்
மற்றும் கவலை ரீதியில் சவாலாக இருந்தது, மேலும் நான் அது
பலருக்கு மிக மோசமாகியது எனக் கவலைப்படுகிறேன்.
நம்மிலும் பிறரிலும் எப்படித் தனிமையைக் கண்டறிவது?
தனிமையின் அறிகுறிகள் எப்போதும் தனியாக இருப்பதுதானா?
[டாக்டர். மூர்த்தி] அதைச் சொல்வது கடினம்.
கூட்டத்தில் கூட, நீங்கள் தனிமையாக உணரலாம்.
அதனால்தான் அவை அனைத்தையும் கொண்டிருக்கும் பல மக்களை இந்த
உலகம் கொண்டிருக்கிறது, சரியா?
அவர்கள் பிரபலமானவர்கள், அல்லது பணக்காரர்கள் அல்லது அதிகாரம் கொண்டவர்கள்.
ஆனால் நமக்கு இருக்கும் இணைப்புகளின் தரம்தான் முக்கியமானது.
-ம்ம் ஹ்ம்ம். -நாம் நாமாக இருக்க முடியாத இடங்களில்
பிறருடன் நாம் பேசும்போது, அது நம்மை இன்னும்
பிறரிடமிருந்து பிரிக்கிறது.
ஆம்.
நமக்கு இருக்கும் தனிமைக்கான மிகச் சிறந்த மருந்துகளில்
சேவை ஒன்று.
நாம் உலகக்குக் கொண்டு வரக்கூடிய மதிப்பு உள்ளது மற்றும்
அது ஒரு சூப் கிச்சனாக இருக்க
வேண்டியதில்லை என்று நம்மை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
ஒருவருடன் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதன் மூலம் மட்டுமே.
நம்மால் அவருக்கு மிகவும் சக்திவாய்ந்ததைக் கொடுக்க முடியும்.
ம்ம் ஹ்ம்ம். சரி.
செலீனா, நம்முடன் அதிக இணைப்புடன் இருப்பதற்கான பயணம்,
பிறருடன் இன்னும் ஆழமாக இணைவதற்கான பயணம்,
நாம் அல்லாத ஒருவராக நம்மை
மாற்றுவதற்கான பயணம் கிடையாது.
இது நாம் உள்ளார்ந்த முறையில் யாரோ அவராக மாறுவதற்கான பயணம்,
-நம் சிறந்ததை மையமாகக் கொண்டு… -அருமை.
…அந்த அன்பைக் கொடுக்கும்போதும் பெறும்போதும்
ம், நமது சிறந்த அர்த்தத்தையும் நிறைவையும் அனுபவிக்கிறோம்.
மிகவும் உண்மை. அது அற்புதமாக இருந்தது.
சரி.
என்னுடன் கீழே வருகிறாயா? இல்லையா?
”வாக்கியங்களை நிறைவுசெய்க.
அந்நியர்கள் என்னை இப்படி விவரிப்பார்கள்… எனக்கு மட்டுமே தெரியும் நான் ஒரு…”
அந்நியர்கள் உன்னை ஒரு அணுகக்கூடிய அமெரிக்கப் பெண்ணாக விவரிப்பார்கள்.
மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என நினைக்கிறேன்,
மேலும் நீ மிகவும் குழப்பமானவள் என்று உனக்கு மட்டுமே தெரியும்.
உனக்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
உனக்கு பல்வேறு பக்கங்கள் உள்ளன.
ஓ.
-ஓ, மன்னிக்கவும். -நீ என்ன சொல்கிறாய், ஆஷ்?
ஆம், அது சிறப்பான பதில்தான்.
[நாக்கைச் சொடுக்குகிறார்] சரி.
”அனைவருக்கும் ஓர் அழைப்பு உள்ளதா? உள்ளது எனில், என்னுடையதை நான் கண்டுபிடித்துவிட்டேனா?”
ஆம், அனைவருக்கும் ஓர் அழைப்பு உள்ளது.
உனக்கான அழைப்பு என்னவென உனக்குத் தெரியும், ஆனால் அதில் எப்போதும் செல்ல நீ தேர்வுசெய்ய மாட்டாய்.
ஏற்றுக்கொள்கிறேன்.
என்ன சொல்கிறாய்?
நமக்கு உத்வேகமளிக்கும் வாழ்வில் நோக்கத்தைக் கொடுக்கும்
உன்னை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களை உனக்குத் தெரியும்.
ஆனால் நீ எப்போதும் அவற்றைத் தேர்வுசெய்ய மாட்டாய் என நினைக்கிறேன்.
ஆம், அது நம்மையே முன்னேற விடாமல் தடுப்பது.
ஆம், அதேதான்.
இயல்பாக இருப்பது அல்லது
-குழப்பமின்றி இருப்பது… -சரி.
…அசௌகரியமானது, ஏனெனில் அதைப் பற்றி நினைத்தால்,
உன் வாழ்க்கை நீண்ட காலத்திற்கு, சிறு வயதிலிருந்து
குழப்பமாகவே இருந்து வருகிறது.
-சரியா? -ஆம்.
இது அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது. அது அதிக சௌகரியமானது.
-ஆம், அதை நம்ப முடியவில்லை. ஓ, அது மோசமானது. -ஆம்.
ஆனால் உனக்குத் தெரியும் என்பதுதான் நல்ல விஷயம். உன்னை நிறைவுசெய்யும் விஷயங்களை உனக்குத் தெரியும்.
-உன்னைச் சந்தோஷப்படுத்துவதை உனக்குத் தெரியும். -[குக்] நீ மிகவும் புத்திசாலி.
உன்னை எது சந்தோஷப்படுத்தாது என உனக்குத் தெரியும்.
ஆ. நான் உன்னை நேசிக்கிறேன்.
இவள் மிகவும் அமைதியாக இருக்கிறாள், இல்லையா?
அது அருமையான விஷயம். அவள் வழக்கமாக தன் கையை அசைப்பாள்.
-[சிரிக்கிறார்] -[கொஞ்சுகிறது]
நான் உன்னைப் பார்க்கிறேன், நீ என்னைப் பார்க்கிறாய்.
ஏனெனில் நான் உன் அம்மா போல இருக்கிறேன்.
[திகைக்கிறார்] என் அம்மாவைப் பார்.
[தோழி] அடக் கடவுளே.
நான் என் அம்மா போல இருக்கிறேனா?
ஆம்.
-என்ன? -[கோமெஸ்] ஓ, நெற்றியில் விழும் அந்த முடி.
அவர் எனது வளர்ப்புத் தந்தை, பிரையனை திருமணம் செய்வதைப் பாருங்கள்.
-ஆம், அவர் எனக்குச் சிறந்த தந்தையாக இருந்தார். -[மிங்கஸ்] ஆ.
-அது இனிமையான விஷயம். அழகாக உள்ளது. -[காஸ்மே] ஆ. அற்புதம்.
-செலீனா? ஹேய். -ஹாய்.
-எப்படி இருக்கிறாய், பெண்ணே? -[தோழி] நலம், எப்படி இருக்கிறாய்?
நன்றாக இருக்கிறேன்.
அவை கடிக்காது.
ஹேய். [முத்தமிடுகிறார்]
இவள் தான் கடைசி குழந்தை.
-அவள் என் கசினின் மகள்… -அடக் கடவுளே.
…என் மற்ற இரு குழந்தைகள் இங்கில்லை, ஏனெனில் என் மகனுக்கு லுக்கிமியா உள்ளது.
-ஓ, இல்லை. -அதனால் அவன் இன்னொரு அம்மாவின் வீட்டில் இருக்கிறான்,
அவனது சகோதரி அவனுடன் இருக்க விரும்பினாள்.
ஆம்.
-அதனால் அவர்களை அங்கே விட்டுவிட்டோம். -[குழந்தை கொஞ்சுகிறது]
என்ன? என்னை பயமுறுத்துகிறாயா?
இது யார் எனத் தெரியுமா?
இது செலீனா கோமெஸ்.
என் பெயர் செலீனா.
-நீ இவருடைய பாடல்களைக் கேட்பாயே? -[சிரிக்கிறார்]
-ஆம். -[திகைக்கிறாள்]
-[அலறுகிறாள்] -[சிரிக்கின்றனர்]
[கோமெஸ் சிரிக்கிறார்]
[அலறுகிறாள்]
[கோமெஸ் சிரிக்கிறார்]
-[தோழி] அவள் எனது நாடகத்தனமான மகள். -[சிறுமி அலறுகிறாள்]
-அது நான் தான். ஆ. -[சிரிக்கிறாள்]
[தோழி] இங்கே வா, பாபா. மாட்டியா?
-ஆம், நீதான் ஆல்ஃபா ஆண். -இவர் உண்மையானவர் என எனக்குத் தெரியாது.
ஆம், இவர் உண்மையானவர்தான்.
-அம்மா இவருடன் பள்ளியில் படித்தேன். -[திகைக்கிறாள்]
இவர் இங்கிருந்து ஒரு தெரு தள்ளிதான் வசித்தார்.
-[அலறுகிறாள்] -அம்மா அவருடன் தான் வளர்ந்தேன்.
நான் உன்னைக் கட்டிப்பிடிக்கலாமா?
-[சிரிக்கிறார்] -சரி. [சிரிக்கிறார்]
இது உனக்கு மகிழ்ச்சியாக உள்ளதா?
ஆம்!
[சிரிக்கிறார்]
-[கோமெஸ்] உங்களுக்கு ஹலோ சொல்ல விரும்பினேன். -மிக்க நன்றி.
-உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. -கண்டிப்பாக. எனக்கும் மகிழ்ச்சி.
-நீ நன்றாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. -ஆம்.
நன்றாக இருந்தது. என்னை நம்பு, அந்தக் கட்டத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது,
ஏனெனில் நான் உன்னுடன் வளர்ந்தேன், எனக்குத் தெரியும். நீ அதை அனுபவித்தது எனக்குக் கஷ்டமாக இருந்தது.
ஆம். நன்றி, நான் சிறப்பாக உணர்கிறேன்.
ஓ, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.
-சரி பை, கண்ணே. பை-பை. -”பை” சொல். “நன்றி” சொல்.
[கோமெஸ்] நம் மனநலத்துடன் போராடும்போது,
அதன் முக்கியமான பகுதி என்பது, என்ன செய்வது எனத் தெரிந்துகொள்வதும்
அதை அடையாளம் கண்டறிவதும்தான்.
அது நான் அவமானப்படாத ஒரு விஷயம்.
நான் முழுமையாக மறந்த விஷயங்களை மீண்டும் கற்க வேண்டும்.
நான், “ஹேய், நீங்கள் மோசமானவர் இல்லை.
நீங்கள் அருவருப்பானவர் இல்லை.
நீங்கள் பைத்தியம் இல்லை. இதில் எதுவும் இல்லை,
ஆனால் நீங்கள் இதைச் சமாளிக்க வேண்டும்.
இது கடினம் எனத் தெரியும், ஆனால் இதுதான் நிஜம்” என்றேன்.
எனக்கு பைபோலார் இருப்பதைக் கண்டறிந்தேன், அது…
அது அங்குதான் இருக்கப் போகிறது.
அதை எனது நண்பராக்கப் போகிறேன்.
நான் நானாக இருக்க அதை நான் கடந்தாக வேண்டும்,
அதை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்,
ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
நான் அமைதியாக உள்ளேன்.
கோபமாக உள்ளேன்.
சோகமாக உள்ளேன்.
நம்புக்கையுடன் உள்ளேன்.
முழுவதும் சந்தேகத்துடன் உள்ளேன்.
நான் செயல்நிலையில் உள்ளேன்.
நான் போதுமானவள்.
நான் செலீனா.
2020 இல், செலீனா கோமெஸ் இளைஞர்களுக்கு இலவச மனநல வளங்களை
வழங்குவதற்காக
100 மில்லியன் டாலர் திரட்ட
ரேர் இம்பாக்ட் ஃபண்டை உருவாக்கினார்.
2022 மே மாதத்தில், செலீனாவும் ரேர் இம்பாக்ட் ஃபண்டும்
வெள்ளை மாளிகையுடன் சேர்ந்து மனநலம் பற்றிய முதல்
இளைஞர் செயல்பாட்டு மன்றத்தை நடத்தினர்.
செலீனா ஜனாதிபதியைச் சந்தித்து நாட்டின் பள்ளிகளுக்கான
மனநலப் பாடத்திட்டத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தார்.
நீங்கள் அமெரிக்காவில் இருந்து, உடனடி உதவி தேவைப்பட்டால்,
988க்கு கால் செய்யுங்கள் அல்லது மெசேஜ் செய்யுங்கள்
நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட ஆலோசகர்களுடன் இணைக்கப்படுவீர்கள்.
நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிப்பவராக இருந்தால்
உலகளாவிய உதவி மையப் பட்டியலைப் பார்க்க APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்கு செல்லவும்.
-[தயாரிப்பாளர்] எங்களை அழைத்ததற்கு நன்றி. -[கோமெஸ்] கண்டிப்பாக.
இந்தச் செயல்முறைக்காக நான் எனது இதயத்தைக் கொடுத்துள்ளேன் என்பதை
மக்கள் புரிந்துகொள்ளவும், நீங்கள் எனது வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொண்டு
அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள் எனப் பார்க்கவும் விரும்பினேன்.
இதற்கு முன் அதைச் செய்தது இல்லை. நீங்கள் செய்துள்ளீர்களா?
-இல்லை, நான்… ஆம். -டைரி எழுதியுள்ளீர்களா?
-இல்லை, அது மிகவும் நெருக்கமானது. -[தயாரிப்பாளர் 2] கண்டிப்பாக.
[தயாரிப்பாளர் 1] உங்கள் டைரியைத் தவறாகக் காட்டாததில் எனக்கு மகிழ்ச்சி.
-[அனைவரும் சிரிக்கின்றனர்] -இல்லை.
தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்