வீடியோ
மொழி
நீ வீட்டிற்க்குச் செல்லும்பொழுது இறந்துவிட்டாய்.
அது ஒரு மகிழுந்து விபத்து.
குறிப்பாக குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை,
ஆனால் கொடூரமானது. அது ஒரு வழியில்லா இறப்பு.
மருத்துவர்கள் உன்னை காப்பாற்ற முடிந்ததை செய்தார்கள்,
ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
உன் உடல் மிகவும் சேதமடைந்து விட்டது,
நீ இறந்தது நல்லது, என்னை நம்பு.
அப்பொழுதுதான் என்னை கண்டாய்.
“என்ன ஆய்விட்டது?”
“நான் எங்கு இருக்கிறேன்?”
“நீ இறந்துவிட்டாய்,” என்று நான் சொன்னேன்.
வேறு எதுவும் இல்லை.
“அங்கு… அங்கு ஒரு பார வண்டி இருந்தது…
…அது சறுக்கிக் கொண்டிருந்தது.”
“ஆமாம்.”
“நான்… நான் இறந்துவிட்டேன்.”
“ஆமாம்.”
“ஆனால் அதைப் பற்றி கவலை படாதே.”
“அனைவரும் இறப்பார்கள்.”
நீ சுற்றி முற்றிப் பார்த்தாய்
அங்கு எதுவும் இல்லை.
நீயும்…
…நானும் மட்டும்தான்.
“இது என்ன இடம்?”
“இதுதான் மரணத்திற்கு பின் வாழ்க்கையா?”
“இருக்கலாம்.”
“நீ கடவுளா?”
“ஆமாம், நான் கடவுள்.”
“என் பிள்ளைகள், என் மனைவி…”
“அவர்கள் ஏன்?”
“அவர்களாள் வாழ முடியுமா?”
“அதுதான் எனக்கு பார்க்க பிடிக்கும்,” என்று கூறினேன்,
“நீ இறந்துவிட்டாய், ஆனால் நீ உன் குடும்பத்தைப் பற்றி கவலை படுகிறாய்.
அது நல்லது.”
என்னை நீ அதிர்ச்சியாகப் பார்த்தாய். உன்னிடம்…
…நான் கடவுளாக தெரியவில்லை…
…நான் ஒரு மனிதனாக தெரிகிறேன்.
அல்லது தெளிவற்ற அதிகார எண்ணிக்கை.
“கவலைப்படாதே,” என்று கூறினேன் ,“அவர்கள் சரியாகே இருப்பார்கள்.”
“உன் பிள்ளைகள் உன்னை மறக்க மாட்டார்கள்.”
“உன்னை நினைத்து வளர…
…அவர்களுக்கு நேரம் இல்லை.
உன் மனைவி வெளியே அழுவாள்,
…ஆனால் மகிழ்ச்சியாக இருப்பாள்.
உன்மையில் உன் கல்யாண வாழ்க்கை இடிந்து விழுகிறது.
மற்றவர்களிடமிருந்து அறிவுரை கிடைத்தால்,
…மகிழ்ச்சியாக இருப்பதனால் குற்றமுடையாக இருப்பாள்.”
“ஓ…
இப்பொழுது என்ன நடக்க போகிறது?
நான் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வேனா?”
“எதுவும் இல்லை, நீ மறுபிறவிக்கப் படுவாய்.”
“ஆ,”
“…அப்படியென்றால் இந்துவர்கள் சொல்வது சரிதான்.”
“எல்லாம் மதமும் அவர்களின் வழியில் உண்மைதான்.
“என்னுடன் நட.”
நம் வெறுமைக்குச் செல்லும் வரை என்னுடன் நடந்தாய்.
“எங்குச் செல்கிறோம்?”
“எங்கேயும் இல்லை. நம் நடந்துக்கொண்டே பேசுவது நல்லா இருக்கும்.”
“இப்பொழுது என்ன சொல்ல வருகிறாய்?
நான் மீண்டும் பிறக்கும் பொழுது,
…காழியான கற்பலகையாக பிறப்பேன் தானே?
ஒரு குழந்தை.
அப்படியென்றால் என் அனுபவம் அனைத்தும்,
…இவ்வாழ்க்கையில் செய்ததெல்லாம் எதுவும் என்னுடன் வராதா?”
“ஆமாம்.
உன் கடந்தகால வாழ்க்கையில்…
உள்ள அறிவு அனுபவம் அனைத்தும் அங்கே முடியும்.
அவ்வனுபவங்கள் இப்பொழுது உன் ஞாபகத்தில் இருக்காது.”
நான் நடப்பதை நின்று…
…உன் தோள்பட்டையின் மேல் கையை வைத்தேன்.
“உன் ஆன்மா நீ நினைப்பதை விட,
அற்புதம், அழகு, மற்றும் பெரியதாக இருக்கின்றது.
ஒரு மனித மனதில் நீங்கள் என்னவென்பதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டிருக்க முடியும்.
இது சூடாகவோ அல்லது குளிராக இருக்கின்றதோ என்று தெரிய…
…ஒரு குவளை தண்ணீரில் உங்கள் விரலை ஒட்டுவது போன்றது.
நீங்கள் உங்களின் ஒரு சிறிய பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து,
பிறகு அதை வெளியாக்கும்பொழுது,
நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பெற்றுவிட்டீர்கள்.
நீங்கள் 48 வருடங்களாக…
…ஒரு மனிதராக இருந்தீர்கள்,
எனவே நீங்கள் இன்னும் நீட்டவில்லை மற்றும்…
…உங்கள் அபரிமிதமான உணர்வை உணர்ந்தீர்கள்.
நாங்கள் இங்கு நீண்ட நேரம் இருந்தால்,
உங்களுக்கு எல்லாம் ஞாபகமும் வரும்.
ஆனால் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் இடையில் அதைச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.”
“அப்படியென்றால் எத்தனை முறை நான் மறுபிறவிக்கப் பட்டேன்?”
“ஓ, நிறைய.
நிறைய முறை, மற்றும் நிறைய வாழ்கைகள்.
இந்த முறை,
…540 A.D இல் நீங்கள் ஒரு சீன விவசாயப் பெண்ணாக இருப்பீர்கள்.”
“இறு, என்ன?”
நீங்கள் என்னை நேரத்தின் பின் அனுப்புறீர்களா?”
“ஆமாம் என்று நினைக்கிறேன்.
உனக்கு தெரிந்த நேரம் உன்னுடைய பிரபஞ்சத்தில் மட்டும் உள்ளது.
நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கு நேரம் இல்லை.”
“நீங்கள்…நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?”
“நான் எங்கிருந்தோ, வேறு எங்கிருந்தோ வருகிறேன்.
அங்கு என்னைப்போல மற்றவர்கள் இருக்கின்றனர்.
அது என்னவென்று உங்களக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும்,
ஆனால் உண்மையில் உனக்கு புரியாது.
“ஓ…” என்று கூறினாய், கவலையாக.
“இரு.
நான் நேரத்தில் மற்ற இடங்களுக்கு மறுபிறவி எடுத்தால்,
…நான் ஒரு கட்டத்தில் என்னுடன் உரையாடியிருக்க முடியும்.”
“ஆமாம், இது எப்பொழுதும் நடக்கும்.
இரு உயிர்களிலும் தங்கள் சொந்த ஆயுட்காலம் பற்றி மட்டுமே தெரிகின்றதால்,
…அது நடக்கின்றது என்று உனக்கு தெரியாது.”
“அப்படியானால், இதற்கெல்லாம் என்ன பயன்?”
நான் உன்னை கண்களில் பார்த்தேன்.
“வாழ்க்கையின் அர்த்தம்,
…இந்த முழு பிரபஞ்சத்தை நான் உருவாக்கிய காரணம்,
…நீ முதிவாகுவதர்காக.”
தவறு, நீ சொல்ல வருவது மனிதகுலம். நாங்கள் முதிர்ச்சியடைய விரும்புகிறீர்களா?”
“இல்லை, நீ மட்டும்தான்.
இந்த முழு பிரபஞ்சத்தை உனக்காகதான் உருவாக்கினேன்.
ஒவ்வொரு புதிய வாழ்க்கையிலும் நீங்கள் வளர்ந்து முதிர்ச்சியடைகிறீர்கள்,
…மற்றும் பெரிய, புத்தியான உயிராக மாறுறீர்கள்.”
“நான் மட்டுமா?
மற்றவர்களுக்கு என்ன?”
“இந்த பிரபஞ்சத்தில் வேறு யாரும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில்,
…நீயும் நானும் மட்டும்தான்.”
நீ என்னை வெறித்துப் பார்த்தாய்.
“ஆனால் பூமியில் உள்ள மக்கள்.”
“எல்லாம் நீதான். உங்கள் வெவ்வேறு ஜென்மங்கள்.”
“இரு, நான் எல்லோரும்?”
“இப்பொழுது உனக்கு புரிகிறது.”
“நான் எல்லாம் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதன்.”
“அல்லது வாழ போகிறவர்கள்,
…ஆமாம்.”
“நான் ஆபிரகாம் லிங்கன்?”
“நீங்களும் ஜான் வில்கேஸ் பூத் தான்.”
“நான் ஹிட்லர்.”
…நீங்கள் சொன்னீர்கள், திகைத்தீயாக.
“மற்றும் நீங்கள் அவர் கொன்ற பத்து லட்சம்மும்தான்.”
“நான் இயேசு?”
“மற்றும் நீங்கள் அவரை வணங்கிய அனைவரும்தான்.”
நீ திடீரென அமைதியாக ஆனாய்.
“ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரை பலிகொடுக்கும்பொழுது,
…நீ உன்னையே பலிக்கொடுத்திருந்தாய்.
நீ செய்த நல்லதெல்லாம்,
…நீ உனக்கே செய்திருந்தாய்.
எந்த மனிதனும் அனுபவித்த ஒவ்வொரு மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்கள்,
…நீங்கள் அனுபவித்தீர்கள் அல்லது அனுபவிப்பீர்கள்.”
நீ நீண்டநேரமாக நினைத்தாய்.
“ஏன்?
…ஏன் இதையெல்லாம் செய்தாய்?”
“ஏன்னென்றால் ஒருநாள் நீ என்னைப்போல ஆவாய்.
ஏனென்றால் அதுதான் நீ.
நீ என் வகையான ஒருவர். நீ என்னுடைய குழந்தை!”
“ஆஹா!” என்று நீங்கள் சொன்னீர்கள், நம்பமுடியாததாக.
“அப்படியென்றால், நான் ஒரு கடவுள்!?”
“இல்லை, இன்னும் இல்லை. நீ ஒரு கரு,
நீ இப்பொழுது வளர்ந்துக் கொண்டிருக்காய்.
நீங்கள் ஒவ்வொரு மனித வாழ்க்கையையும் எல்லா நேரத்திலும் வாழ்ந்தவுடன்,
…நீங்கள் பிறக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவீர்கள்.”
“அப்படியென்றால், இம்முழு பிரபஞ்சம்…
அது…”
“ஒரு முட்டை!”,
என்றுக் கூறினேன்.
“இப்போது நீங்கள் உங்கள் அடுத்த வாழ்க்கைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
நான் உன்னை உன் வழியில் அனுப்பினேன்.