கொரோனா வைரஸ் பற்றிய விளக்கம் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்! | Kurzgesagt

🎁Amazon Prime 📖Kindle Unlimited 🎧Audible Plus 🎵Amazon Music Unlimited 🌿iHerb 💰Binance

வீடியோ

மொழி

டிசம்பர் 2019 அன்று

சீன அதிகாரங்கள் தங்கள் சமூகத்தில் வைரஸ் ஒன்று பரவுகிறது என்று உலகத்திற்கு அறிவித்தது.

அடுத்து வரும் மாதங்களில்

வேறு நாடுகளுக்கு இரு மடங்காக சில நாட்களுக்குள் பரவியது.

‘SARS-COV-2’ எனப்படும் இந்த வைரஸ்

‘கோவிட்-19’ என்ற நோயை ஏற்படுத்தும்.

இதை எல்லோரும் எளிதாக ‘கொரோனா வைரஸ்’ என்று அழைப்பார்.

ஒரு நபர் மீது தொற்றினால் உண்மையில் என்ன நடக்கும்?

நாம் எல்லோரும் என்ன பண்ண வேண்டும்?

வைரஸ் என்பது மரபணுத்தொகை மற்றும் சில புரோட்டின்கள் சார்ந்த ஒரு மேலோடு.

விவாதத்துக்குரிய உயிர் இல்லாத ஒன்று.

உயிருள்ள செல்களுக்குள் நுழைந்தால் தான் தன்னைத்தானே இன்னும் உருவாக்கும்.

மேற்பரப்பு மூலமாக கொரோனா பரவலாம்.

ஆனால் அதில் எவ்வளவு காலமாக பிழைத்திருக்கும் என்பதில் உறுதியில்லை.

முதன்மையாக தொற்றுவது சிறுதுளிகளில் இருந்து.

ஆட்கள் இருமும்போது.

அல்லது நோய் உடையவரை தொட்ட பின்பு முகத்தில் கையை வைத்தால்.

குறிப்பாக கண்ணில் அல்லது மூக்கில் கையை வைக்கும் போது.

வைரஸின் பயணம் இங்கே ஆரம்பித்து உடலுக்குள் ஆழமாகச் செல்லும்.

குடல், மண்ணீரல் அல்லது நுரையீரல் ஒன்றை நோக்கிச் செல்லும்.

அங்கே தான் விளைவு அதிகமாக இருக்கும்.

ஒருசில கொரோனா வைரஸ்கள் கூட கொடூரமான நிலமையை ஏற்படுத்தும்.

நுரையீரல் பில்லியன் கணக்கான புறத்தோல் உயிரணுக்களால் நிரப்பப்பட்டது.

இவை உங்கள் உடலின் எல்லை செல்கள், உங்கள் உறுப்புகளையும், சளிச்சுரப்பையும் பாதிக்கக் காத்திருக்கின்றன.

கொரோனா அதன் மரபணுப் பொருளை செலுத்த அதன் பாதிக்கப்பட்டவரின் சவ்வுகளில் ஒரு குறிப்பிட்ட ஏற்பியுடன் இணைகிறது.

என்ன நடக்கிறது என்பதை அறியாத செல், புதிய வழிமுறைகளை செயல்படுத்துகிறது, அவை:

“நகலெடுத்து மீண்டும் இணைக்கப்படுவதாகும்”

இது மேலும் மேலும் நகல்களை நிரப்புகிறது, அசல் வைரஸின் முக்கியமான புள்ளியை அடைந்து ஒரு இறுதி ஆர்டரைப் பெறும் வரை…

அதாவது, “தன்னைத்தானே அழித்து கொள்வது”

உயிரணு ஒரு வகையாக உருகி, புதிய செல்களைத் தாக்க புதிய கொரோனா துகள்களை வெளியிடுகிறது.

தொற்றப்பட்ட செல்களின் எண்ணிக்கை அதிவேகமாக வளரும்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் கழிந்து

மில்லியன் கணக்கில் செல்கள் தொற்றப்படும்…

பில்லியன் கணக்கில் வைரஸ்கள் நுரையீரலை மொய்க்கும்.

வைரஸ் இன்னும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

ஆனால் கொரோனா இனி ஒரு இடத்தில் தான் தாக்கும்.

நமது நோய் எதிர்ப்புத் தொகுதியில்.

ஒருத்தரை பாதுகாக்க வேண்டிய நோய் எதிர்ப்புத் தொகுதி ஆபத்தையும் கொடுக்கும்.

இதற்கு நெருக்கமான கட்டுப்பாடும் தேவை.

வைரஸை எதிர்ப்பதற்கு நோய் எதிர்க்கும் செல்கள் நுரையீரலுக்குள் ஊற்றும்போது

இதில் கொரோனா சில செல்களைத் தொற்றி குழப்பத்தை ஏற்படுத்தும்.

செல்களுக்கு காதும் இல்லை கண்ணும் இல்லை எனவே இவை கூடுதலாக சிறிய உயிரணு தொடர்பிகள்,

“சைட்டோகைன்கள்” எனப்படும் தகவல் புரோட்டின்கள் மூலம் தொடர்பு கொள்ளும்

கிட்டத்தட்ட எல்லா முக்கிய நோய் எதிர்ப்பு எதிர் வினைகளும் இவையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் தொற்றப்பட்ட நோய் எதிர்ப்பு செல்கள் நிலைகுலைத்து அலறும்.

ஒரு விதத்தில், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒரு சண்டை வெறிக்குள்ளாக்குகிறது

மற்றும் தேவைக்கு விட அதிகமான வீரர்களை அனுப்புகிறது,

அதன் வளங்களை வீணடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது

குறிப்பாக இரண்டு வித செல்கள் பேரழிவை ஏற்படுத்தும்.

முதலாவது நியூட்ரோபில்ஸ் செல்கள்.

இவை கொல்லுவதில் சிறந்தவை. நம் செல்களை உட்பட.

அது ஆயிரக்கணக்கில் வரும்போது,

​​எதிரிகளைப்போல பல நண்பர்களை அழிக்கும் என்சைம்களை வெளியேற்றத் தொடங்குகிறது

மற்ற முக்கிய வித செல் ‘கில்லர் டி’ என்று அழைக்கப்படும்.

இது பொதுவாக பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கட்டுப்படுத்தப்பட்ட தற்கொலைக்கு உத்தரவிடுகிறது.

குழப்பமான இவை ஆரோக்கியமான செல்களை தங்களைத் தாமேயும் கொல்ல கட்டளை இடும்.

இன்னும் இன்னும் நோய் எதிர்ப்பு செல்கள் வர…

இன்னும் பாதிப்பு ஏற்படும்…

இன்னும் ஆரோக்கியமான நுரையீரல் திசுகள் பழதாகும்.

இது திருத்த முடியாத நிரந்தர சேதங்களை உருவாக்கும்

வாழ்நாள் இயலாமைக்கு கரணமாகும்.

கூடுதலாக, நோய் எதிர்ப்பு தொகுதி மெதுவாக கட்டுப்பாட்டை மீண்டும் பெறும்.

தொற்றப்பட்ட செல்களை கொன்றுவிட்டு…

புதிய செல்களைத் தொற்றப் பார்க்கும் வைரஸ்களை தடுத்து நிறுத்தி…

போர்க்களத்தை சுத்தம் செய்யும்.

குணமடைதல் ஆரம்பிக்கும்.

கொரோனாவால் தொற்றப்பட்ட பெரும்பாலான நபர்கள் ஒப்பீட்டளவில் லேசான அறிகுறிகளுடன் இருப்பார்கள்

ஆனால் பலருக்கு கடுமையாக அல்லது நெருக்கடியாக கூட ஆகிவிடும்.

எல்லா தொற்றுகளும் அடையாளம் கண்டுப்பிடிக்காததனால் சதவிகிதம் தெரியாது.

ஆனால் காய்ச்சலைக் காட்டிலும் நிறைய இருக்கிறது என்று சொல்வது பாதுகாப்பானது.

மிகவும் கடுமையான நிகழ்வுகளில்,

மில்லியன் கணக்கான எபிடெலியல் செல்கள் இறந்துவிட்டன, அவற்றுடன்,

நுரையீரலின் பாதுகாப்பு புறணி இல்லாமல் போய்விட்டது

அதாவது ஆல்வியோலி - சுவாசம் நிகழும் சிறிய காற்றுப் பைகள் -

பொதுவாக ஒரு பெரிய பிரச்சினை இல்லாத பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம்.

நோயாளிகளுக்கு நிமோனியா ஏற்படும்.

சுவாசிப்பது கடினமாகும் அல்லது முடியாமல் இருக்கும்.

பிழைத்துக் கொள்வதற்கு நோயாளிகளுக்கு சுவாசித்தல் கருவி அவசியப் படும்.

நோய் எதிர்ப்புத் தொகுதி வாரங்களாக முழுத் திறனோடு மோதி…

மில்லியன் கணக்கில் வைரஸை தடுக்கும் ஆயுதங்களை உருவாக்கியிருக்கும்.

மேலும் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் விரைவாகப் பெருகும்போது, ​​அது அதிகமாகிறது.

ரத்தத்துக்குள் நுழைந்து உடலை மேல்விழுத்தும்.

இது நடந்தால் மரணம் பெரும்பாலும் நிகழக்கூடியது.

கூடுதலாக கொரோனா வைரஸ் ஃப்ளூவுடன் ஒப்பிடப்படும். ஆனால் உண்மையில் இது இன்னும் ஆபத்தானது.

தொடர்ச்சியான தொற்றுநோய்களின் போது சரியான இறப்பு விகிதத்தை குறைப்பது கடினம் என்றாலும்,

உறுதியாகச் சொல்லக் கூடியது.. இது மிகவும் தொற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டது

மற்றும் ஃப்ளூவை விட வேகமாக பரவும்.

கொரோனா போன்ற ஒரு தொற்றுநோய்க்கு இரண்டு எதிர்காலங்கள் உள்ளன:

வேகமானதும் மெதுவானதும்.

எந்த எதிரகாலத்தைக் காண்போம் என்பது

நாம் இந்த திடீர் நிகழ்வின் ஆரம்பக் காலத்தில் எப்படி எதிர்த்து செயல்படுவோம் என்பதை பொறுத்தது.

வேகமான தொற்று பயங்கரமாக இருக்கும். பல உயிர்களையும் எடுக்கும்.

மெதுவான தொற்று வரலாற்று நூல்களில் மறக்கப்படும்.

வேகமான தொற்றுநோய்க்கான மோசமான சூழ்நிலை மிக விரைவான நோய்த்தொற்றுடன் தொடங்குகிறது

ஏனென்றால் வேகத்தை குறைப்பதற்கு எந்த வித எதிர்செயல்களும் கிடையாது.

இது ஏன் அவ்வளவு மோசம்?

வேகமான தொற்றில்… பல பேர் ஒரே நேரத்தில் நோய்வாய்ப்படுவார்.

எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தால், சுகாதார அமைப்புகளால் அதைக் கையாள முடியாமல்போகும்

எல்லோரையும் உதவும் மருத்துவ பணியாளர்களும்

சுவாசக்கருவி போன்ற கருவிகளான சாதனங்கள் போதுமானதாக இருக்காது.

மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோய்விடுவார்.

இன்னும் சுகாதார பராமரிப்புப் பணியாளர் நோய்வாய்பட்டால்,

சுகாதாரப் பாதுகாப்பு முறைகளின் திறன் மேலும் குறைகிறது.

இது நிகழ்ந்தால்,

யார் வாழலாம் யார் வாழக்கூடாது என்ற பயன்கரமான முடிவுகள் எடுக்க வேண்டியதாகும்.

இப்படியான நிலைமையில் இறப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வரும்.

இதை தவிர்ப்பதற்கு, முழு உலகமும்

  • அதாவது நாம் -

முடிந்த அளவில் இதை மெதுவான ஒரு தொற்றாக மாற்றவேண்டும்.

சரியான எதிர்ச்செயல்களால் தொற்றின் வேகத்தைக் குறைக்கலாம்.

குறிப்பாக ஆரம்பக்கட்டத்தில்…

இதனால் நோய்வாய்படும் எல்லோருக்கும் சிகிச்சை பெறமுடியும்

மற்றும் அதிகப்படியான மருத்துவமனைகளில் நெருக்கடியும் இருக்காது.

கொரோனாவை எதிர்த்து தடுப்பூசி இல்லாததனால்,

நாம் சமூக ரீதியாக நம் நடத்தையை வடிவமைக்க வேண்டும்

அதாவது ஒரு சமூக தடுப்பூசி போல செயல்படவேண்டும்.

இது இரண்டு விஷயங்களைக் குறிக்கிறது:

1: நமக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது; மற்றும் 2. மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தக்கூடாது.

இது அற்பமானதாகத் தோன்றினாலும், நீங்கள் செய்யக்கூடிய

மிகச் சிறந்த விஷயம் உங்கள் கைகளைக் கழுவுவதுதான்.

உண்மையில் சோப்பு ஒரு சக்திவாய்ந்த கருவி.

கொரோனா வைரஸ் அடிப்படையில் கொழுப்பின் ஒரு அடுக்கில் இணைக்கப்பட்டுள்ளது;

சோப்பு அந்த கொழுப்பைத் துண்டித்து உங்களைப் பாதிக்க முடியாமல் விடுகிறது.

இது உங்கள் கைகளை வழுக்கும்,

மற்றும் சலவை செய்வதற்கான இயந்திர இயக்கங்களுடன்,

வைரஸ்கள் அகற்றப்படுகின்றன.

அதைச் சரியாகச் செய்ய, நீங்கள் சில ஜலபீனோக்களை(ஒரு வகை மிளகாய்) வெட்டிய பின்பு,

உங்கள் காண்டாக்ட் லென்ஸ்களை கண்கள் மேல் வைப்பதைப் போல, உங்கள் கைகளைக் கழுவுங்கள்.

அடுத்தது, ஒருத்தருக்கு ஒருத்தர் இடைவெளி விடுவது.

இது ஒரு நல்ல அனுபவம் அல்லது என்றாலும்… ஒரு நல்ல விஷயம்.

அதாவது கட்டி அணைத்தலும் கூடாது, கை குலுக்கலும் கூடாது.

வீட்டிலேயே இருக்கமுடிந்தால் வீட்டிலேயே இருங்கள்.

சமூகம் செயல்பட வெளியே இருக்க வேண்டியவர்களைப் பாதுகாக்க வீட்டிலேயே இருங்கள்:

மருத்துவர்கள் முதல் காசாளர்கள் அல்லது பொலிஸ் அதிகாரிகள் வரை;

நீங்கள் அனைவரையும் சார்ந்து இருக்கிறீர்கள்;

அவர்கள் அனைவரும் நோய்வாய்ப்படாமல் இருக்க உங்களைச் சார்ந்து இருக்கிறார்கள்.

ஒரு பெரிய மட்டத்தில், தனிமைப்படுத்தல்கள் உள்ளன, அவை வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கும்,

அதாவது பயண கட்டுப்பாடுகளிலிருந்து, வீட்டிலேயே தங்குவது வரை

தனிமைப்படுத்திவிடுவது நிச்சயமாக நல்லதொரு அனுபவம் கிடையாது.

நிச்சயமாக பிரபலமானதாகவும் இல்லை.

ஆனால் அவை - குறிப்பாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான நேரத்தை வாங்கி கொடுக்கிறது.

எனவே நீங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால்,

அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

அதை மதிக்கவும் வேண்டும்.

இதெல்லாம் வேடிக்கையானது கிடையாது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது

இது நம் செலுத்த வேண்டிய சிறிய விலை.

இந்த தொற்று எப்படி முடிந்துவிடும் என்ற கேள்விக்கு பதில் அது எப்படி ஆரம்பித்தது என்பதைப் பொறுத்தது.

வேகமான ஏற்றத்துடன் ஆரம்பித்தால், மோசமாக முடிந்துவிடும்.

அவை மெதுவாகத் தொடங்கினால்

அதாவது அவ்வளவு செங்குத்தான சாய்வுடன் இல்லாமல் இருந்தால்,

இது சிறிய அளவிலான பாதிப்போடு முடியும்

மேலும், இந்த நாளிலும், காலகட்டத்திலும், அது உண்மையில் நம் கைகளில் உள்ளது.

உண்மையாகவும், மற்றும்

அடையாளப்பூர்வமாகவும்

இந்த வீடியோவுடன் குறுகிய அறிவிப்பில் எங்களுக்கு உதவிய நிபுணர்களுக்கு ஒரு பெரிய நன்றி,

குறிப்பாக, “அவர் வெர்ல்டு இன் டேட்டா”

உலகின் மிகப்பெரிய பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான ஆன்லைன் வெளியீடு

மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது.

அவர்களின் தளத்தைப் பாருங்கள்.

கொரோனா தொற்றுநோய் பற்றிய விவரங்களுடன் தொடர்ந்து

புதுப்பிக்கப்பட்ட பக்கமும் இதில் அடங்கும்

As an Amazon Associate I earn from qualifying purchases 🛒
கொண்டு கட்டப்பட்டது (ノ◕ヮ◕)ノ🪄💞💖🥰 across the gl🌍🌏🌎be